Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை பார்த்து திருந்துங்கப்பா- கேப்டன்சி பின்னால் ஓடும் இளம் வீரர்கள்.. பதவியே வேண்டாம் என்ற கோலி

மும்பை : தற்போதுள்ள இளம் வீரர்கள் ஒவ்வொருவரும் கேப்டன் பதவியை நோக்கி ஓடி வரும் நிலையில் யாருமே கேள்வி கேட்காத நிலையில் தமக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என்று விராட் கோலி அந்தப் பதவியை ராஜினாமா செய்து இருப்பதை ரசிகர்கள் போற்றி வருகிறார்கள்.

மேலும் பலரும் விராட் கோலியை பார்த்து திருந்த வேண்டும் என்றும் அந்த ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மும்பை அணி கேப்டன் பதவி தருவதாக ஹர்திக் பாண்டியாவை ஆசை காட்டி தங்களது பக்கம் இழுத்து விட்டது.

IPL - Fans asking bumrah and hardik pandya to learn from virat kohli

இந்த நிலையில் அடுத்த கேப்டன் பதவி தமக்கு தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பும்ரா கடுப்பாகி தற்போது மும்பை அணியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் மறைமுக பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இதனால் பும்ரா மும்பை அணியை விட்டு வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று ஏற்கனவே சென்னை அணியில் கேப்டன் பதவி தமக்கு தரவில்லை எனக் கூறி ஜடேஜாவும் அணியை விட்டு வெளியேற முயற்சி செய்தது யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் கேப்டனாக தொடர்ந்த விராட் கோலி தம்மை யாருமே கேள்வி கேட்க முடியாத நிலையிலும் அந்தப் பதிவில் தான் தொடர விரும்பவில்லை.

தான் இருந்தவரை ஐபிஎல் கோப்பை எங்களுடைய அணிக்கு கிடைக்கவில்லை என்று காரணம் காட்டி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அணிக்கு தேவையான உதவிகளை எப்போதுமே செய்ய முன் நிற்பேன் என்றும் விராட் கோலி கூறினார். அன்று முதல் இன்று வரை அவர் தொடர்ந்து ஆர்சிபி அணியில் தான் இருந்து வருகிறார்.

அவ்வளவு ஏன் பாரம்பரியமிக்க இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியே தொடர வேண்டும் என கங்குலி உள்ளிட்டோர் வலியுறுத்திய நிலையில் அந்தப் பதவியும் வேண்டாம் என்று ராஜினாமா செய்து வெளியே வந்தவர் தான் விராட் கோலி. கோலி போன்ற வீரர்கள் அணிக்காக தங்களது உடல் உயிர் அனைத்தையும் கொடுக்கும் நிலையில் தற்போதுள்ள இளம் வீரர்கள் கேப்டன் பதவியை நோக்கி ஓடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, November 28, 2023, 17:15 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+