Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வேற ஐபிஎல் அணிக்கு மாறப் போகிறாரா? பதறிப் போய் பதில் சொன்ன மும்பை இந்தியன்ஸ்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி தன் வீரர்கள் மற்றும் குழுவிற்கு அளித்த தீபாவளி சிறப்பு விருந்தில் பும்ரா கலந்து கொள்ளவில்லை.

அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் பும்ரா எங்கே காணவில்லை? என கேள்வி எழுப்பி வதந்தி பரப்பும் வகையில் ஒரு கருத்தை கூறி இருந்தார்.

அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பதில் அளித்து அவரை சாந்தப்படுத்தி இருந்தது வியப்பை அளித்தது. பும்ரா எங்கேயும் போகவில்லை என கூறுவது போல அமைந்தது.

தீபாவளி சிறப்பு விருந்து

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பம் சார்பாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிற்கு தீபாவளி சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பலரும் கலந்து கொண்டனர்.

பும்ரா எங்கே?

பும்ரா எங்கே?

ஹர்திக் பண்டியா, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், மகிளா ஜெயவர்தனே உள்ளிட்டோர் அந்த விருந்தில் பங்கேற்றனர். ஆனால், அணியின் முக்கிய வீரரான பும்ராவை காணவில்லை.

ரசிகர் வதந்தி

இதைக் கண்ட ஒரு ரசிகர், "பும்ரா எங்கே? அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மாறப் போகிறார் என நினைக்கிறேன்" என வதந்தி பரப்பி ஒரு கருத்தை கூறி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் பதில்

பெரும்பாலும் ரசிகர்கள் பதிவிற்கு பதில் அளிக்காத மும்பை இந்தியன்ஸ், இதற்கு பதறிப் போய் பதில் அளித்துள்ளது. வார்த்தைகள் எதுவும் கூறாமல், ரோஹித் சர்மா, "அமைதியாக இருங்கள்" என கூறுவது போன்ற "கிப்" பயன்படுத்தி பதில் கூறி இருந்தது. வதந்தி பரவக் கூடாது. அதே சமயம் நச்சென பதில் கூற வேண்டும் என யோசித்து மும்பை இந்தியன்ஸ் போட்டிருந்த பதிவு வரவேற்பை பெற்று வருகிறது.

தேசிய கிரிக்கெட் அகாடமி

தேசிய கிரிக்கெட் அகாடமி

பும்ரா தற்போது காயத்தில் இருப்பதால் அதற்காக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருக்கலாம் என தெரிகிறது.

Story first published: Saturday, October 26, 2019, 20:19 [IST]
Other articles published on Oct 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+