Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடேங்கப்பா”.. ஐபிஎல்-ல் இது புதுசு.. இஷானின் மிரட்டல் சாதனை.. வியந்து பார்த்த மும்பை ஜாம்பவான்கள்!

அபுதாபி: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், இஷான் கிஷன் பல சாதனைகளை தகர்த்து, புது வரலாற்றை எழுதியுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.8) இரண்டு டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தையும், ஆர்சிபி அணி டெல்லியையும் எதிர்த்து விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் மும்பை அணி வென்றாலும், பிளே ஆஃப் முன்னேறுவது கடினமே. எனினும், சில கணித விகிதங்களின் அடிப்படையில் மும்பைக்கு வாய்ப்புள்ளது. தற்போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை, SRH பவுலர்களை விட்டு விளாசி வருகிறது. குறிப்பாக, இஷான் கிஷன் பிரம்மிக்க வைத்துவிட்டார்.

 பந்து வீச்சில் முத்திரை

பந்து வீச்சில் முத்திரை

அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், துபாயில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோதி வருகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றில் நுழைய 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. நேற்றைய போட்டி முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. போட்டியில் மீதமிருப்பது கொல்கத்தாவும், மும்பையும் தான். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது எனலாம்.14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது. ஏற்கனவே ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருந்த கொல்கத்தா அணி ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தது.

 80 ரன்களில் சுருட்டணும்

80 ரன்களில் சுருட்டணும்

நடப்பு சாம்பியனான மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்பதே கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ்களின் கணிப்பாக உள்ளது. 12 புள்ளியுடன் 6 வது இடத்தில் உள்ள அந்த அணி ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதாவது முதலில் பேட் செய்து மும்பை 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதே நேரத்தில் பந்துவீச்சில் ஐதராபாத்தை 80 ரன்களில் சுருட்ட வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால் நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஏதாவது அதிசயம், அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை வாய்ப்பை பெற முடியும். இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அணியில் ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், சன் ரைசர்ஸ் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு, வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த மனீஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதில் தான் கேப்டனாக செயல்படுவது என்று கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ் குமாரும் காயத்தில் சிக்கியிருப்பதால், முகமது நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 புதிய சாதனை

புதிய சாதனை

ஆட்டம் தொடங்கியதில் இருந்து மும்பை ஒவ்வொரு பந்துகளையும் விளாசி வருகிறது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், சன் ரைசர்ஸ் பவுலர்களை பாரபட்சம் பார்க்காமல் விளாசித் தள்ளியிருக்கிறார். கேப்டன் ரோஹித் ஷர்மா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டாக, மறுப்பக்கம் எதைப்பற்றியும் கவலைப்படாத இஷான் கிஷன், 16 பந்துகளில் அரைசதம் விளாசி மிரள வைத்தார். மும்பை அணியில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவேயாகும்.

16 கிஷன் Vs SRH அபுதாபி 2021 *

17 கே பொல்லார்ட் vs கேகேஆர் மும்பை 2016

17 I கிஷன் Vs KKR கொல்கத்தா 2018

17 H பாண்டியா vs KKR கொல்கத்தா 2019

17 கே பொல்லார்ட் vs சிஎஸ்கே டெல்லி 2021

 புதிய வரலாறு

புதிய வரலாறு

இதற்கு முன்னர் இஷான் கிஷன், பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே, மும்பை அணியின் அதிவேக அரைசதமாகும். அதனை அவரே இப்போது முறியடித்திருக்கிறார். 10 ஓவர்களுக்கெல்லாம் 130 ரன்கள் குவித்துவிட்டது மும்பை அணி. எனினும், அவர் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் ஓவரில் கேட்ச்சானார். இதில், 11 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும், பொல்லார்ட் 13 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

Story first published: Friday, October 8, 2021, 21:43 [IST]
Other articles published on Oct 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+