For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக அளவுல சிறப்பான டெத் பௌலர் அவர்... என்னோட வேலையை ஈஸியாக்கிட்டாரு... போல்ட் பாராட்டு

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 9வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ட்ரெண்ட் போல்ட் 3.4 ஓவர்களை போட்டு 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே நேற்றைய போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடி 151 ரன்களை சன்ரைசர்ஸ் அணிக்கு இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்திருந்தது. ஆயினும் சேஸ் செய்யக்கூடிய அந்த ஸ்கோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் அடிக்க முடியவில்லை

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

சன்ரைசர்ஸ் அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியின் ஸ்கோரை சுருக்கினர். இரண்டாவதாக விளையாடிய அந்த அணியின் பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்களை குவித்தனர். ஆயினும் அந்த அணியின் அடுத்தடுத்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் அவர்களால் வெற்றியை அடையமுடியல்லை.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட் 3.4 ஓவர்களில் 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களில் வெறுமனே 14 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

பும்ராவிற்கு போல்ட் பாராட்டு

பும்ராவிற்கு போல்ட் பாராட்டு

இந்நிலையில் பும்ராவின் நேற்றைய போட்டியில் அவர் மிகவும் தெளிவாக பௌலிங் செய்தததாக ட்ரெண்ட் போல்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். டெத் ஓவர்களில் உலக அளவில் மிகவும் சிறப்பான பௌலர்களில் ஒருவர் பும்ரா என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் தன்னுடைய வேலையை பும்ரா எளிதாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான பிட்ச்

கடினமான பிட்ச்

நேற்றைய போட்டியில் தங்களுடைய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்ததாக ஒப்புக் கொண்ட போல்ட், ஆனால் சென்னை போன்ற பிட்ச்சில் தான் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் விக்கெட்டுகளை எடுப்பது கட்டாயமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சேசிங்கில் சிறப்பாக அணி வீரர்கள் விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Sunday, April 18, 2021, 13:35 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
You can really get back in the chase -Trent Boult
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+