Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு அந்த ஓவர் மட்டும் இனி வீசமாட்டேன்.. ரொம்ப டேஞ்சர்..ஐபிஎல் அனுபவத்தை பகிர்ந்த பேட் கம்மின்ஸ்

ஐபிஎல் தொடரில் தோனிக்கு ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டும் ஓவர் வீசக்கூடாது என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல்-ல் பங்கேற்ற அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு சென்றுவிட்டனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் சற்று தாமதமாக சென்றனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் பாதியில் நின்றாலும், அது குறித்த பேச்சுக்கள் இன்னும் அடங்கிய பாடு இல்லை. முன்னாள் வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஐபிஎல் வீரர்கள் என தங்களை அனுபவங்களையும், ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டதால் மனம் உடைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆதங்கம்

ஆதங்கம்

ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் அணி அப்போது தான் சிறப்பாக விளையாடி வந்தோம். தொடரின் 2வது பாதி எங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. முக்கியமாக இந்த தொடரில் எனது ஆட்டம் தற்போதுதான் சூடுபிடித்தது. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் மிக கடினமாக இருந்தது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போதும் விடாப்படியாக போராடினோம். அது மிக கடினமான போட்டியாக அமைந்தது எனக்கூறியுள்ளார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

மேலும் அவர், தோனிக்கு எதிராக கடைசி ஓவரை மட்டும் வீசக்கூடாது. ஏனென்றால் கடைசி ஓவர்களில் தோனியின் செயல்பாடு மிக அதிரடியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்கும் பல வீடியோக்களை பார்த்துள்ளேன். அதில் அதிகப்படியாக பவுலர்கள் யார்க்கர் பந்தை சரியாக வீசாததால் தோனி சிக்ஸர் பறக்கவிடுவார். எனவே அவருக்கு எதிராக நான் யார்க்கர் வீசமாட்டேன். பவுன்சர் பந்து, அல்லது ஸ்லோ பால் மட்டுமே வீசுவேன். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு நான் கடைசி ஓவர் வீசுவதை தவிர்ப்பேன் எனக்கூறியுள்ளார்.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

இந்த ஐபிஎல் தொடரில் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவ்வளவு பெரிதாக சோபிக்கவில்லை. மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல் என அதிரடி வீரர்களை வைத்துள்ள போதும் அந்த அணி 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடரின் 2வது பாதியில் அந்த அணியில் எழுச்சி தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 27, 2021, 23:12 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+