Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.. போனை எடுத்து அந்த வீரருக்கு மெசேஜ் செய்த கோலி.. வெளியான பரபர பின்னணி

சென்னை: ஐபிஎல் 2021 ஏலத்திற்கு பின் கேப்டன் கோலி இளம் வீரர் ஒருவருக்கு மெசேஜ் செய்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் டி 20 போட்டிகள் மீதும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

அடுத்த மாதம் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. அதன்பின் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது என்பதால் டி 20 பார்மெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

எப்படி

எப்படி

முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் கோலி பெங்களூர் அணி மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்த ஐ பிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கோலி இருக்கிறார். இதற்காக ஐபிஎல் 2021 ஏலத்தில் தரமான அணியை கோலி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாருதீன்

அசாருதீன்

கோலி தேர்வு செய்த வீரர்களில் கேரளாவை சேர்ந்த அசாருதீன் மிக முக்கியமான வீரர் ஆவார் . இளம் வீரரான அசாருதீன் கடந்த சையது முஷ்டாக் கோப்பையில் சிறப்பாக ஆடினார் . 40 பந்துகளில் இவர் அடித்த சதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

கேரளா

கேரளா

இந்த பிரபலத்திற்கு பின் பேட்டி அளித்த அசாருதீன்.. இந்திய அணியில் எனக்கு ஆட வேண்டும். அதேபோல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு ஆட வேண்டும்.கோலியுடன் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதை நிறைவேற்ற வேண்டும், என்று அசாருதீன் குறிப்பிட்டு இருந்தார்.

ஆசை

ஆசை

இந்த நிலையில் அசாருதீன் எதிர்பார்த்தது போலவே பெங்களூர் அணி இவரை ஏலம் எடுத்தது. அசாருதீனை 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. இந்த நிலையில் அசாருதீனுக்கு கோலி உடனே மெசேஜ் செய்து இருக்கிறார் .

மெசேஜ்

மெசேஜ்

அவரின் நம்பரை வாங்கி கோலி மெசேஜ் செய்துள்ளார். அதில், உங்களை ஆர்சிபி குடும்பத்திற்கு வரவேற்கிறேன். நன்றாக ஆடுங்கள். சையது முஷ்டாக் கோப்பையில் உங்கள் ஆட்டம் நன்றாக இருந்தது என்று கோலி மெசேஜ் செய்து இருக்கிறார்.

ஏலம்

ஏலம்

ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் கோலி இந்த மெசேஜை அனுப்பி இருக்கிறார். இதை அசாருதீன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. நடப்பது எல்லாம் கனவு போல இருக்கிறது என்று அசாருதீன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, February 22, 2021, 9:14 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+