Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த நொடியில் எனக்கிருந்த கவலை.. மேன் vs வைல்ட் போல.. கொரோனா குறித்து சுவாரயஸ்யமாக கூறிய எல்.பாலாஜி!

சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பரபரப்பான தனது கொரோனா அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் மே 4ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீரர்கள் ஒவ்வொருவாராக குணமடைந்து வருகின்றனர்.

ஐபிஎல்-ல் கொரோனா

ஐபிஎல்-ல் கொரோனா

முதலில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதியானது. அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா உறுதியானது. எனினும் அவர்கள் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். இந்நிலையில் தனது கொரோனா அனுபவத்தை லட்சுமபதி பாலாஜி பகிர்ந்துள்ளார்.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

மே 2ம் தேதியன்று எனது உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்தேன். உடல் வலி, மூக்கு அடைப்பு போன்றவை இருந்தது. இதனையடுத்து அன்று மதியமே செய்த பரிசோதனை செய்யப்பட்டு மறுநாள் காலை கொரோனா உறுதியானது. எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பயோ பபுள் விதிகளை எதையும் மீறவில்லை. எனினும் எனக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக நான் ஹோட்டலில் தனி இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதென்பது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மேன் vs வைல்ட் தொடர் போன்று இருந்தது.

வீரர்கள் குறித்து கவலை

வீரர்கள் குறித்து கவலை

என்னால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் வெளியில் மக்கள் தினம் தினம் உயிரிழப்பதை கண்ணால் பார்த்து வருகிறேன். அந்த நொடியில் இருந்து நான் சக வீரர்களை பற்றி கவலை பட தொடங்கிவிட்டேன். ஏனென்றால் ராபின் உத்தப்பா, புஜாரா, தீபக் சாஹர் ஆகியோர் எனது அருகிலே தான் இருந்தனர்.

சவால்

சவால்

அது ஒரு வாழ்வா சாவா போராட்டம் போன்று இருந்தது. நாட்டில் பல்வேறு மக்கள் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டாலும், சிலரால் உயிர்ப்பிழைக்க முடியவில்லை. எனது வாழ்வில் நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் இது சற்று வித்தியாசமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 22, 2021, 20:36 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+