For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புல் ஷாட்னா அவர்தான் மாஸ்டர்... 34வது பிறந்தநாள்ல ஹிட்மேனுக்கு ஐசிசி பாராட்டு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்திலேயே மும்பை இந்தியன்ஸ் நீடித்து வருகிறது.

4வது இடத்தில் மும்பை அணி

4வது இடத்தில் மும்பை அணி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடித்து வருகிறது.

ரோகித் பிறந்தநாள்

ரோகித் பிறந்தநாள்

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 34வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ஐசிசி , பிசிசிஐ ஆகியவை தனது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகிறது.

3 இரட்டை சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 3 இரட்டை சதங்களை அடித்துள்ள ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய ரோகித் சர்மாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஐசிசி, அவர் புல் ஷாட்களின் மாஸ்டர் என்று பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் அவர் குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து

இதேபோல ஐபிஎல்லில் ரோகித் கேப்டனாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இதனிடையே, அவர் 14,684 சர்வதேச ரன்களை குவித்துள்ளது குறித்து பாராட்டு தெரிவித்துள்ள பிசிசிஐ பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

சஹல் பாராட்டு

இதனிடையே, ஆர்சிபி வீரர் சஹல், அவர் தன்னுடைய வாழ்க்கையின் விருப்பம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் வழக்கம் போல ரோகித்தை ரோகிதா என்று கலாய்த்துள்ளார். இதேபோல சுரேஷ் ரெய்னா, கலீல் அகமது ஆகியோரும் ரோகித்திற்கு பிறந்தநாள் வாழத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, April 30, 2021, 13:38 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Rohit Sharma is the only player to have hit 3 double centuries in ODIs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+