For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டி தெறிக்கும் மீம்ஸ்.. பிளே ஆப்க்கு நாங்களும் வரலாமா..MI யின் தரமான செய்கை

ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி லீக் ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது தற்போது தான் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த இரண்டு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட மும்பை அணி வராத நிலையில் தற்போது 6 புள்ளிகளை பெற்று பட்டியலில் முன்னேறி வருகிறது. இந்தத் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

Memes Fest for Fans as Arjun tendulkar and mumbai indians shines in ipl

இதனால் மும்பை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகுபலி படத்தில் ராணா டகுபதி எப்படி சண்டையில் சிறப்பாக செயல்படும்போது அதனைப் பார்த்து நாசர் பூரிப்படைவாரோ அதனை மீம்ஸ் ஆக போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் தனது மகன் முதல் விக்கெட்டை எடுத்தவுடன் என்னோட பையன் ஆச்சே என்று பாராட்டுவது போல் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டாலும் ஊடகங்கள், ரசிகர்கள் அர்ஜுன் டெண்டுல்கர் குறிவைத்து பாராட்டுவதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். இதில் செய்தியாளர்கள் சந்திப்பில் அனைவரின் மைக்கும் ஒருவரிடம் மட்டும் உள்ளதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

இதே போன்று மும்பை அணி தொடர்ந்து மூன்று முக்கிய அணிகளை வீழ்த்திவிட்டு தற்போது பஞ்சாப்பை வீழ்த்த வருவதை கிண்டலாக சித்தரித்து இருக்கிறார்கள். இதில் அந்நியன் கெட்டப்பில் மும்பை அணி டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத்தை வீழ்த்திவிட்டு தற்போது பஞ்சாப் அணியின் கதவை கட்டுவது போல் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

6 புள்ளிகளை பெற்று மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.இதனால் பிளே ஆப் சுற்றுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணி வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை குறிப்பிடும் விதமாக புரோட்டா சூரி பந்தயத்திற்கு நாங்களும் வரலாமா என்று கேட்பது போல் மும்பை மற்ற அணிகளை பார்த்து கேட்பதாக மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சொதப்பி வருகிறார். தொடர்ந்து இரண்டு போட்டிகளாக 50 ரன்கள் அவர் பந்து வீச்சில் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து தமிழக ரசிகர்கள் வருத்தப்படுவது போல் மீம்ஸ் போட்டு கலாய்த்து இருக்கிறார்கள்.

Memes Fest for Fans as Arjun tendulkar and mumbai indians shines in ipl
Memes Fest for Fans as Arjun tendulkar and mumbai indians shines in ipl
Story first published: Wednesday, April 19, 2023, 7:56 [IST]
Other articles published on Apr 19, 2023
English summary
Memes Fest for Fans as Arjun tendulkar and mumbai indians shines in ipl அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டி தெறிக்கும் மீம்ஸ்.. பிளே ஆப்க்கு நாங்களும் வரலாமா..MI யின் தரமான செய்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+