Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை பிட்ச்ல இருந்து தப்பிச்சாச்சு... சென்னைக்கு டாட்டா... டெல்லிக்கு நகரும் மும்பை இந்தியன்ஸ்!

சென்னை : சென்னையில் கடந்த 5 போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணி ஆடியுள்ள நிலையில் தற்போது அடுத்த இடத்திற்கு செல்லவுள்ளது.

இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியும் தன்னுடைய அடுத்த 4 போட்டிகளை வேறு இடத்தில் ஆடவுள்ளது.

சென்னை பிட்ச் குறித்த தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மும்பை இந்தியன்ஸ் இதையடுத்து அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னையில் 5 போட்டிகள்

சென்னையில் 5 போட்டிகள்

ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஹோம் அட்வான்டேஜ் இல்லாததையடுத்து தன்னுடைய முதல் 5 போட்டிகளை சென்னையில் ஆடியது மும்பை அணி. ஆனால் சென்னையில் பிட்ச் அந்த அணிக்கு சிறப்பாக கைகொடுக்கவில்லை.

2 போட்டிகளில் வெற்றி

2 போட்டிகளில் வெற்றி

இதனால் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2ல் மட்டுமே நடப்பு சாம்பியனால் வெற்றி கொள்ள முடிந்தது. இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை சென்னையில் இரு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது.

ரன்களை அடிக்க திணறல்

ரன்களை அடிக்க திணறல்

சென்னை பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை என்றும் அதிகமான ஸ்கோர்களை அடிக்க முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல மும்பை இந்தியன்ஸ் கடந்த போட்டிகளில் சிறப்பான ரன்களை குவிக்கவில்லை. ரன்களை அடிக்க மிகவும் தடுமாறிய நிலையையே பார்க்க முடிந்தது.

டெல்லிக்கு நகர்வு

டெல்லிக்கு நகர்வு

நேற்றைய போட்டியில் ரோகித், சூர்யகுமார் சிறப்பாக விளையாடிய போதிலும் மும்பை அணியால் 131 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீயும் அதிர்ச்சி தெரிவித்திந்தார். இந்நிலையில் 5 போட்டிகளில் சென்னை பிட்ச்சில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அடுத்த 4 போட்டிகளை விளையாட டெல்லிக்கு செல்கிறது.

அகமதாபாத்தில் 4 போட்டிகள்

அகமதாபாத்தில் 4 போட்டிகள்

இதேபோல இரு போட்டிகளை சென்னையில் ஆடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்ததாக நரேந்திர மோடி மைதானத்தில் அடுத்த 4 போட்டிகளை விளையாடவுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளும் சென்னை பிட்ச்சிற்கு டாட்டா காட்டிவிட்டு இங்கிருந்து புறப்படவுள்ளன.

Story first published: Saturday, April 24, 2021, 20:42 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+