மச்சா.. இனிமே வலிமை அப்டேட்டை .. மொயீன் அலி கிட்ட.. சேப்பாக்லேயே கேட்டுக்கலாம்.. !
சென்னை: என்னதான் சொல்லுங்க.. மொயீன் அலிக்கு ரொம்பவே சோதனைக்காலம்.. எல்லாப் பேரும் இனி வலிமை அப்டேட்டைக் கேட்டுக் கொல்லப் போறாங்க.. அந்த அளவுக்கு வலிமை அப்டேட்டுக்காக ரசிகர்கள் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வலிமை.. படம் இன்னும் வரவே இல்லை.. ஆனால் அதற்குள் சர்வதேச லெவலில் ஹிட்டடித்து விட்டது இந்தப் பெயர். அதுதான் "தல" பவர்!
சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு மொயீன் அலியை மண்டை காய வைத்து விட்டனர்.

வாட்ஸ் இஸ் வலிமை
வலிமைன்னா என்னப்பா என்று அஸ்வினிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அச்சா என்று சிரித்துள்ளார் மொயீன் அலி. அப்படிப்பட்ட மொயீன் அலியை சும்மா விடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்.. வயசும் வேற 30 பிளஸ் ஆயிருச்சு மொயீன் அலிக்கு.. ஸோ, தூக்குடா அந்த செல்லத்தை என்று ஏலத்தில் எடுத்துக் கொண்டு வந்து விட்டனர்.

சென்னையின் மெயின்!
இப்ப மொயீன் அலி சென்னைக்கு மாப்பிள்ளை ஆகி விட்டார். இனிமேல் அஜீத் ரசிகர்கள் அங்குமிங்கும் அலைய வேண்டாம். நேராக மொயீன் அலியிடமே அப்டேட் கேட்டுக்கலாம். அந்த அளவுக்கு சவுகரியம் செய்து கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்ப இதைத்தான் டிவிட்டரில் போட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

இங்கேயே கேட்டுக்கலாம்
ஒருவர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார்.. எல்லா அஜீத் பேன்ஸும் இனி வலிமை அப்டேட்டை சேப்பாக் மைதானத்திலேயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். மொயீன் அலி இங்கேயே வந்து விட்டார். சூப்பர் ஆல் ரவுண்டர். 7 கோடிக்கு எடுத்தது ஒர்த்தான் என்று பாராட்டியுள்ளார்.. கூடவே ரசிகர்களையும் கலாய்த்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
இவர் அதுக்கும் மேல.. வலிமை பர்ஸ்ட் லுக்கை மொயீன் அலியை வைத்து ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பாளர் போனி கபூருக்கு கோரிக்கை வைத்துள்ளார். என்னா டைமிங்கான கலாய் பாருங்க.. பட் செய்தாலும் நல்லாதான் இருக்கும். மொயீன் அலி மூலம் வெளியிட்டால் நல்லாதான் இருக்கும்.

அதுக்காகவா
இன்னொருவர் ரொம்பத் தைரியமாக சென்னை சூப்பர் கிங்ஸையே கலாய்த்துள்ளார். ஆர்சிபி விடுவித்த ஒரே காரணத்துக்காகவே மொயீன் அலியை தோனி ஏலத்தில் எடுத்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என்று கூறி தொழில் ரசசியத்தை எல்லாம் பட்டப் படாரென லீக் செய்து கலாய்த்துள்ளார். மோரிஸுக்கு அடுத்து மொயீன் அலிதான் இன்று டாக் ஆப் தி டிவிட்டர்.


Click it and Unblock the Notifications