Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.8 கோடி வீண்.. மீண்டும் ஆர்ச்சர் காயமாம்.. டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி விளையாடி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்தப் பக்கம் குஜராத் அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Mumbai Captain Rohit Sharma won the toss and chose to bowl against Gujarat

அதுமட்டுமல்லாமல் 8 ஆண்டுகளுக்கு பின் அகமதாபாத் மைதானத்தில் மும்பை அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியை பொறுத்தவரை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் மெரிடித்தை மும்பை அணி சேர்த்துள்ளது.

அதேபோல் ஷோக்கின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் திலக் வர்மா இம்பேக்ட் பிளேயராக சேர்க்கப்பட்டு, அவருக்கு பதில் நேஹல் வதேரா சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே குஜராத் அணி களமிறங்கியுள்ளது.

இதனால் இம்பேக்ட் வீரர்களாக ஜோஷ்வா லிட்டில், ஷனகா, ஷிவம் மாவி, சாய் கிஷோர் மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் குஜராத் அணியின் பந்துவீச்சின் போது எந்த வீரர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், மெரிடித், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப்

குஜராத் அணி விவரம்: சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அஹ்மத், மோகித் சர்மா

Story first published: Tuesday, April 25, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+