Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை ரசிகர்களுக்கு விருந்து ரெடி.. ரோகித் படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை.. அதிரடி கன்ஃபார்ம்!

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு அபுதாபியில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் தான் ரோகித்தின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஹிட் மேன் ரோகித்

ஹிட் மேன் ரோகித்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் பூரண குணமடைந்துள்ளார் என்பதால் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் புதிய சாதனை படைக்கவுள்ளார். அதாவது டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடிக்கப்போகும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். 34 வயதாகும் ரோகித் சர்மா இதுவரை டி20 போட்டிகளில் 397 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இன்று சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசினால் புதிய சாதனையை படைக்கலாம். டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 397 சிக்ஸர்களில் 224 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் அடித்தவையாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 173 சிக்ஸர்களும், 51 சிக்ஸர்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் அடித்ததாகும்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

இந்திய அணியில் சிக்ஸர் அடிப்பதில் ரோகித்தின் அருகில் கூட எந்த வீரரும் வரவில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 324 சிக்ஸர்களும், விராட் கோலி 315 சிக்ஸர்களும் அடித்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். சிஎஸ்கே கேப்டன் தோனி 303 சிக்ஸர்கள் விளாசி 4வது இடத்தில் உள்ளார்.

வீரர்களின் பட்டியல்

வீரர்களின் பட்டியல்

சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 8 வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். கெயிரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், மெக்கலம், ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசி ரோகித் சர்மா இந்த பட்டியலில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 23, 2021, 22:26 [IST]
Other articles published on Sep 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+