Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு மட்டும் சிறப்பு அனுமதியா? 2 சப்ஸ்டியூட் வீரர்கள் கொண்டு வந்தது எப்படி.. என்ன நடந்தது?

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் எப்படி 2 சப்ஸ்டியூட் வீரர்களை பயன்படுத்தியது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. இதனையடுத்து மீண்டும் பேட்டிங் செய்ய வந்த போது மும்பை அணியில் ஆகாஷ் மத்வால் நீக்கப்பட்டு இம்பேக்ட் வீரராக வதேரா களமிறக்கப்பட்டார்.

Mumbai indians used the 2 substitute players by following this icc rules

இதே போன்று போட்டியின் போது காயம் ஏற்பட்ட இஷான் கிஷனுக்கு பதில் விஷ்ணு வினோத் அணிக்குள் வந்து விளையாடினார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் காயம் ஏற்பட்டதால், அவர் ரிட்டயர்ட் ஹர்ட்டாகி பேட்டிங் செய்யவே வர மாட்டார்.

இதனால் மும்பை அணியில் 9 பேட்ஸ்மேன்கள் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐசிசி கொண்டு வந்த வீரர்களுக்கு தலையில் அடிப்பட்டு, அவர்களால் விளையாட முடியவில்லை என்றால், அவர்களுக்கு உரிய மாற்று வீரர்களை களமிறக்கலாம் என்ற விதி இருக்கிறது.

இதை வைத்து தான் மும்பை அணி, விஷ்ணு வினோத் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை 2வது மாற்று வீரராக கொண்டு வந்தது. இதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை. எனினும் போட்டிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, இணான் கிஷனுக்கு கண்கசன் ஏற்படும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்று கூறினார். மேலும் போட்டி முடிந்த உடன் இஷான் கிஷன் வீரர்களுடன் சகஜமாக நின்று பேசி கொண்டு தான் இருந்தார். இதனால், மும்பை வேண்டும் என்றே இஷான் கிஷனை களமிறக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, May 27, 2023, 23:09 [IST]
Other articles published on May 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+