Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பான சாதனை... ரோகித்துக்கு 32 ரன்தான் தேவை... இன்னைக்கி போட்டியில அடிப்பாரா ஹிட்மேன்?

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் தனது சூப்பர் சாதனைக்கு ரோகித் சர்மா காத்திருக்கிறார்.

இதேபோல ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பான சாதனையை மேற்கொள்ள இன்றைய போட்டிக்காக காத்திருக்கிறார்.

24வது போட்டி

24வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 24வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. மும்பை இந்தியன்ஸ் இதுவரை சென்னையில் ஆடியுள்ள 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னையின் பிட்சை அந்த அணியால் சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயிக்கும் கட்டாயம்

ஜெயிக்கும் கட்டாயம்

இந்நிலையில் இன்று முதல் துவங்கி 4 போட்டிகளை டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தில் அந்த அணி ஆடவுள்ளது. இந்த பிட்ச் அந்த அணிக்கு கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

மிடில் ஆர்டரில் பிரச்சினை

மிடில் ஆர்டரில் பிரச்சினை

இன்றைய போட்டியில் வெற்றி கொண்டால் மட்டுமே புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள அந்த அணி முன்னேற முடியும். நடப்பு சாம்பியனான அந்த அணி இதுவரை தனது சிறப்பான போட்டிகளை அளிக்கவில்லை. அந்த அணியில் மிடில் ஆர்டர் உள்ளிட்டவற்றில் பிரச்சினைகள் காணப்படுகிறது. அதை சரிசெய்து இன்றைய போட்டியை அந்த அணி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

ரோகித் காத்திருப்பு

ரோகித் காத்திருப்பு

இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பான ஒரு சாதனைக்காக ரோகித் சர்மா காத்திருக்கிறார். ஐபிஎல்லில் அதிக ரன்களை விராட் கோலி (6041), சுரேஷ் ரெய்னா (5489) மற்றும் ஷிகர் தவான் (5462) ஆகியோர் பெற்றுள்ள நிலையில் 3வது இடத்தில் உள்ள ஷிகரை முந்த ரோகித்திற்கு இன்னும் 32 ரன்களே உள்ளது.

ரோகித்துக்கு 5 சிக்ஸ்கள் மீதம்

ரோகித்துக்கு 5 சிக்ஸ்கள் மீதம்

இந்நிலையில் டி20 வடிவத்தில் 400 சிக்ஸ்களை பூர்த்தி செய்ய ரோகித் சர்மாவிற்கு இன்னும் 5 சிக்ஸ்களே மீதமுள்ளன. இதனிடையே இஷான் கிஷன் 1000 ஐபிஎல் ரன்களை அடிக்க இன்னும் 35 ரன்களே மீதமுள்ளன. இதேபோல 2000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்ய ஜோஸ் பட்லருக்கு 62 ரன்கள் மீதமுள்ளன.

3 சிக்ஸ்கள் மீதம்

3 சிக்ஸ்கள் மீதம்

இதனிடையே ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 100 சிக்ஸ்கள் சாதனையை பூர்த்தி செய்ய இன்னும் 3 சிக்ஸ்களே மீதமுள்ளன. அந்த அணியின் ஷேன் வாட்சன் இந்த சாதனையை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில் 3 சிக்ஸ்களை இன்றைய போட்டியில் அடித்தால் அந்த சாதனையை செய்யும் இரண்டாவது ராஜஸ்தான் வீரராக சாம்சன் இருப்பார்.

Story first published: Thursday, April 29, 2021, 23:54 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+