Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs CSK: மும்பையின் ஆதிக்கம் தொடருமா? பகை முடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே.. யாருக்கு வெற்றி?

மும்பை: கால்பந்தில் பார்சிலோனா - ரியம் மேட்ரிட் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் எல் கிளாசிகோ என்று ரசிகர்களால் சொல்லப்படும். ஏனென்றால் அந்த நாட்டின் மிகவும் பிரபலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்பதோடு, எதிரி அணிகள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். அதனால் அந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை எல் கிளாசிக்கோ என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

அதுபோல் இந்தியாவில் நடத்தப்படும் வரும் ஐபிஎல் தொடரில் பரம எதிரிகள் என்றால் சென்னை - மும்பை தான். ரசிகர்கள், கோப்பைகள், போட்டிகள், வெற்றிகள், தோல்விகள் என்று அனைத்து விவகாரங்களில் ஒரு அணிக்கு இன்னொரு அணி சளைத்தவர்கள் அல்ல. ஆட்டத்தின் கடைசி பந்திலும் போட்டி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாறும் வகையிலே சீட் எட்ஜ் த்ரில்லராகவே இந்தப் போட்டிகள் அமைந்து வருகிறது. இந்த வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள 12வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளது.

Mumbai to Play against CSK in Wankhede Stadium in the El Clasico of IPL 2023

இந்த நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கடைசி முறையாக தனது தலைமையில் கோப்பையை வெல்ல ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளார். இன்னொரு பக்கம் இரு ஆண்டுகளாக அடைந்து வரும் தோல்வியில் இருந்து மீள்வதற்காக மும்பை அணி களமிறங்கியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், லக்னோ அணிக்கு எதிரான 2வது போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.

ஆனால் மும்பை அணியோ பெங்களூரு மண்ணில் மோசமான தோல்வியை பதிவு செய்துவிட்டு, மீள முடியாமல் தள்ளாடி வருகிறது. இருப்பினும் சென்னை அணிக்கு எதிரான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பதால், அந்த அணி கம்பேக் கொடுக்க கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திலக் வர்மாவை தவிர்த்து மும்பை அணியில் எந்த வீரரும் ஃபார்மில் இல்லாதது தான் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை தீபக் சஹர், ஹங்கர்கேகர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் சரியாக பந்துவீசினாலே பாதி வெற்றியை எட்டிவிடலாம். நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட சென்னை அணியால் சேஸிங்கில் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் விரட்ட முடியும். ஆனால் கடந்த இரு போட்டியிலும் தோனி டாஸை தோற்றுள்ளதால், இன்றையப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். வான்கடே மைதானமும் சேஸிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என்பதால், ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இருந்தாலும் வெற்றிப் பயணத்தை தொடரவும், முதல் வெற்றியை அடையவும் இரு அணிகளும் போட்டிபோடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20 போட்டிகளில் மும்பை அணியும், 14 போட்டிகளில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராக மட்டுமே அதிகமாக தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 8, 2023, 8:05 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+