For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அர்ஜுன் டெண்டுல்கர் நீக்கம்.. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்.. மும்பைக்கு ஆர்ச்சரும் வந்துட்டாரு!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் விளையாடப்படும் 1000வது போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Rajasthan Royals won the toss and Captain Sanju samson chose to bat against Mumbai Indians

அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பிறந்தநாள் என்பதால், மும்பை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் மும்பை அணி சார்பாக அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் பெஹ்ரண்டார்ஃப் நீக்கப்பட்டு ஆர்ச்சர் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் ராஜஸ்தான் அணி சார்பாக ஆடம் ஷாம்பா நீக்கப்பட்டு மீண்டும் போல்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட் , ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, மெரிடித், அர்ஷத் கான்

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், துருவ் ஜுரெல், ஹெட்மயர், அஸ்வின், ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்

Story first published: Sunday, April 30, 2023, 19:12 [IST]
Other articles published on Apr 30, 2023
English summary
MI vs RR: Rajasthan Royals won the toos and chose to bat against Mumbai Indians in IPL 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+