Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித்தை மீண்டும் கேப்டன் ஆக்கினால்.. ".. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அஸ்வின் சொன்ன ஐடியா

மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அதிரடி யோசனையை தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமே அணியில் தொடர வைக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். 2026 ஐபிஎல் முடிந்தது முதலே ஹர்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு விலக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "நான் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடத்தில் இருந்தால், ஹர்திக் பாண்டியாவை விடுவித்தால் அவருக்கு இணையான வீரர் யார் என்றே முதலில் யோசிப்பேன். அவருக்கு நிகரான மாற்று ஆல்ரவுண்டர் தற்போது இந்தியாவிலேயே யாருமில்லை. அதனால் ஏதோ ஒரு வழியில் ஹர்திக்கை மும்பை அணியிலேயே திருப்தியாக வைத்திருக்க வேண்டும். ரோஹித்தை மீண்டும் கேப்டனாக்கி, ஹர்திக்கை ஒரு வீரராக மட்டும் ஆட வைப்பது மிகச் சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரலாம்" என்றார்.

Ravichandran Ashwin Suggests Mumbai Indians Reappoint Rohit Sharma As Captain For IPL 2027

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இதுபற்றிப் பேசிய அஸ்வின், "ஹர்திக் பல காயங்களைச் சந்தித்துவிட்டார். அவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உலவுகின்றன. ஒரு வீரர் மன அமைதியோடும் மகிழ்ச்சியாகவும் கிரிக்கெட் ஆட விரும்புகிறார். தான் முழு முயற்சி செய்தும் மும்பை அணியில் நிலைமை சரியாக அமையவில்லை என்று ஹர்திக் உணர்ந்தால், அவர் வேறு அணிக்கு மாறவே அதிக வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டார்.

மேடையில் மோடி பாராட்டியதும் வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

மேடையில் மோடி பாராட்டியதும் வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

மேலும், ரோஹித் சர்மா கேப்டனாகத் திரும்பினால் அணி வீரர்களின் முழு ஆதரவு அவருக்குக் கிடைக்கும் என்று அஸ்வின் தெரிவித்தார். சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏற்கெனவே ரோஹித்தின் தலைமையில் பல ஆண்டுகள் ஆடியவர்கள். ரோஹித் மீது ஒட்டுமொத்த அணிக்கும் மிகுந்த மரியாதை உண்டு. பும்ராவுக்கு கேப்டன் பதவி மீது தீவிர ஆசை இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றும், 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் நேர்மறையான சூழலை உருவாக்கினால் ஹர்திக் அழுத்தமின்றி சிறப்பாக விளையாட முடியும் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.

Story first published: Friday, October 16, 2026, 8:18 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+