
மும்பையில் பயிற்சி முகாம்
ஐபிஎல் 2021 தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது 8 ஐபிஎல் அணிகளும் மற்றும் அதன் வீரர்களும் அதற்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது பயிற்சி முகாமை மும்பையில் துவங்கி நடத்தி வந்தது.
பயிற்சிக்கு திரும்பிய வீரர்கள்
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 தொடர்களும் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் பங்கேற்று விளையாடிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகியோர் புனேவில் இருந்து மும்பையில் தங்களது பயிற்சி முகாம்களுக்கு திரும்பியுள்ளனர்.
பயிற்சியில் இணைந்த ரோகித்
இதேபோல நேற்றைய தினம் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடிய குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா, தற்போது மும்பை பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னையில் முதல் போட்டி
இவர்கள் மும்பையில் தங்களது 7 நாட்கள் குவாரன்டைனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் ஐபிஎல்லின் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னைக்கு தங்களது பயிற்சி முகாமை மும்பை இந்தியன்ஸ் அணி கூடிய விரைவில் மாற்றவுள்ளது.


Click it and Unblock the Notifications