Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாவை இமிடேட் செய்த மகள்... ஆனாலும் அணியை ஊக்குவிக்க தவறலை!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த திங்கட்கிழமை முதல் இணைந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

அவரை ஊக்குவிக்கும்வகையில் அவருடன் அவரது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா உடன் உள்ளனர்.

இந்நிலையில் ரோகித்தின் புல்-ஷாட்டை இமிடேட் செய்த சமைராவின் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அணியில் இணைந்த ரோகித்

அணியில் இணைந்த ரோகித்

ஐபிஎல் 2021 வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் துவங்கவுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியை சென்னையில் ஆர்சிபியுடன் விளையாட உள்ளது. இதனிடையே இங்கிலாந்து இடையிலான தொடர்களை முடித்துக் கொண்டு கடநத் திங்கட்கிழமை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியில் இணைந்துள்ளார்.

இமிடேட் செய்த சமைரா

இமிடேட் செய்த சமைரா

அவரை போட்டிகளில் ஊக்குவிக்கும்வகையில் அவரது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா அவருடன் உள்ளனர். பயிற்சிகள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் அவருக்கு சிறப்பான வகையில் பொழுது கழிந்து வருகிறது. இந்நிலையில் அவரது புல்-ஷாட்களை சமைரா ஆடுவது போன்ற வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

பயிற்சி செய்த சமைரா

ரோகித்தின் ஹெட்மெட்டை போட்டுக் கொண்டு சமைரா புல் ஷாட்களை பயிற்சி செய்கிறார். ஹெல்மெட்டில் உள்ள மும்பை இந்தியன்ஸ் வார்த்தைகளை ரித்திகா கைகாட்டி கேட்க, அந்த மழலை மொழியில் மும்பை இந்தியன்ஸ் என்று சமைரா கூறுவது க்யூட்டாகவும் அந்த அணியை ஊக்குவிக்கும்வகையில் அமைந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஹாட்ரிக் கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் அந்த வெற்றியை தொடருமா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தன்னுடைய இருப்பை பெருமளவில் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 31, 2021, 17:39 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+