Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரணகளத்துலயும் குதூகலம்... ஹர்திக், சூர்யாவோட சேர்ந்து திரைக்கு பின்னால் வீடியோ வெளியிட்ட ஹிட்மேன்!

சென்னை : ஐபிஎல் போட்டிகளுக்காக சிறப்பான வகையில் தயாராகி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சென்னையில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.

Rohit Sharmas Fun BTS Video With Hardik Pandya, Suryakumar Yadav

இந்த தீவிரமான நேரத்திலும் ஹர்திக் மற்றும் சூர்யகுமாருடன் இணைந்து திரைக்கு பின்னால் தான் மேற்கொண்ட சேட்டை வீடியோவை வெளியிட்டுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்.

ஐபிஎல் 2021 தொடர் வரும் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கென அனைத்து அணிகளும் சிறப்பான வகையில் தங்களை தயார் படுத்தி வருகின்றன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக தயாராகி வருகிறது. இந்த முறை கோப்பையை வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற மும்பை இந்தியன்ஸ் அணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்த ரணகளத்திலும் அணியின் விளம்பரத்தின்போது அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவுடன் தான் மேற்கொண்ட சேட்டைகளை திரைக்கு பின்னால் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஹிட்மேன் ரோகித் சர்மா. அதில் மூவரின் சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இது ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறுவது தான் என்றாலும் அணி வீரர்களுடன் இதை மேற்கொள்வது உற்சாகமான ஒன்று என்றும் ரோகித் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 4, 2021, 17:27 [IST]
Other articles published on Apr 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+