Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித் சர்மாதான் அடுத்த கேப்டன்".. மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து அஸ்வின் அதிரடி கணிப்பு

சென்னை: 2027 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடமே மீண்டும் ஒப்படைப்பதுதான் மிகச் சிறந்த முடிவாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாகக் கூறியுள்ளார். கடந்த 2026 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய மும்பை அணி 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்தச் சூழலில் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மாவே அடுத்த கேப்டனாவதற்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார் என்று அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் உடனடியாகத் தீர்க்க வேண்டிய குழப்பங்கள் பல உள்ளன. மெகா ஏலத்திற்கு முன்பாக இருக்கும் இந்தக் குறுகிய காலத்தில் அணியைச் சரிசெய்ய யாருக்கு அனுபவம் இருக்கிறது? அது நிச்சயமாக ரோஹித் சர்மாவிடம் மட்டுமே உள்ளது. டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைத்து வீரர்களாலும் மதிக்கப்படும் ஒரு தலைவர்தான் தற்போதைய தேவை. புதிய தலைமைப் பயிற்சியாளர் பொல்லார்ட்டுடன் ரோஹித்துக்கு மிகச் சிறந்த நட்பும், ஆழமான புரிதலும் உள்ளது. எனவே இந்த ஆண்டுக்கான மிகத் தெளிவான தேர்வு ரோஹித் சர்மா மட்டுமே" என்றார்.

Rohit Sharma Should Be Made Captain of Mumbai Indians for IPL 2027 says Ravichandran Ashwin

மற்ற முன்னணி வீரர்களைக் கேப்டன் பதவியிலிருந்து ஒதுக்கிய அஸ்வின், "ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலேயே நீடிப்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது. அதனால் அவர் கேப்டனாகத் தொடர வாய்ப்பே இல்லை. ஜஸ்பிரித் பும்ராவுக்கு உடற்தகுதி சார்ந்த சிக்கல்கள் இருப்பதால் அவரை கேப்டனாக்க முடியாது. சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய அணியிலும் இல்லை, மும்பை ரஞ்சி அணியிலும் இல்லை. எனவே அவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாகத் தேர்வு செய்யாது" என்று விளக்கமளித்தார்.

"இதுதான் நிஜம்.. ஏத்துக்கிட்டுதான் ஆகணும்".. கேப்டன் பதவி பறிபோனதும் சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கவுர்

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள இளம் வீரர் திலக் வர்மாவின் பெயரும் கேப்டன் பதவிக்குப் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால், 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்த ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி பழைய வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்று அஸ்வின் உறுதியாகத் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்ட் கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 26, 2026, 11:09 [IST]
Other articles published on Oct 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+