சீனியரை களத்தில் கேவலமாக திட்டிய ரோகித்.. கொஞ்சம் ஓவராக தான் போறீங்க ஹிட்மேன்.. பொளக்கும் ரசிகர்கள்
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்தில் இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் என கருதப்படும் ரோகித் சர்மா சமீப காலமாக களத்தில் மற்ற வீரர்களை திட்டி வருவது தொடர் கதையாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடும் போது ஜூனியர் வீரர்களை ரோகித் சர்மா திட்டுவதும் அடிக்க முற்படுவதும் என நடந்து கொண்டார்.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் பியூஷ் சாவ்லாவை ரோகித் சர்மா களத்திலே கடுமையாக திட்டிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி ஆறு ஓவர்களில் 96 ரன்களை குவித்தது.இதில் குறிப்பாக அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் திவாத்தியா 5 பந்தில் 20 ரன்கள் அடித்தனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்களை எடுத்தது. இந்த இன்னிங்ஸின் 17 வது ஓவரில் அபினவ் மனோகர் அடித்த பந்து Third man திசையில் சென்ற போது அதனை தடுக்க பியூஸ் சாவ்லா தவறிவிட்டார். பந்தை சரியாக கவனிக்காமல் விட பந்து அவர் கால்களுக்கு நடுவில் சென்றது.இதனைப் பார்த்ததும் கடுப்பான ரோகித் சர்மா களத்திலே பியூஷ் சாவ்லாவை திட்டினார.
பியூஷ் சாவ்லா இந்திய அணிக்காக 2006 ஆம் ஆண்டில் அறிமுகமான வீரர் ஆவார். ரோகித் சர்மாவை விட ஒரு வயது குறைவாக இருந்தாலும் களத்தில் சீனியர் என்பதை கூட பார்க்காமல் ரோகித் சர்மா திட்டிய விதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோகித் சர்மா திட்டியதும் தான் செய்த தவறை நினைத்து பியூஷ் சாவ்லா களத்திலேயே தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications