Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 விக்கெட், ஹாட்ரிக் சாதனை வேறு.. மிரட்டிய சாய் கிஷோர்.. உத்தரகாண்டை துவம்சம் செய்து தமிழ்நாடு

சென்னை: 2026 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தமிழக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 10 விக்கெட்டுகளை அள்ளி வரலாற்று சாதனை படைத்துள்ளார். நடப்பு 2026-27 ரஞ்சி தொடரின் முதல் ஹாட்ரிக் இதுவாகும்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு சுருண்டது. தமிழக பந்துவீச்சாளர்கள் சாய் கிஷோர், குர்ஜப்னீத் சிங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Sai Kishore Takes a Hat-Trick and 10 Wickets as Tamil Nadu Defeats Uttarakhand by an Innings in Ranji Trophy

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி, 313 ரன்கள் குவித்து பலமான முன்னிலை பெற்றது. நங்கூரம் போல நின்று ஆடிய பிரதோஷ் ரஞ்சன் பால் 279 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 136 ரன்களும், பாபா இந்திரஜித் 217 பந்துகளில் 77 ரன்களும் விளாசினர். உத்தரகாண்ட் தரப்பில் மயங்க் மிஸ்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்த உத்தரகாண்ட் அணிக்கு சாய் கிஷோர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது சுழற்பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த அணி வெறும் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உத்தரகாண்ட் அணியின் 4 பேட்டர்கள் சாய் கிஷோரின் சுழலில் சிக்கி பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக ஆட்டத்தின் 43-வது ஓவரில் லக்ஷ்யா ராய்ச்சந்தானி, சவுரப் ராவத் மற்றும் ஆதித்யா ராவத் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி சாய் கிஷோர் அட்டகாசமான ஹாட்ரிக் சாதனை படைத்தார். 2-வது இன்னிங்சில் 16 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளினார்.

“சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.. நான் உச்சக்கட்ட ஃபார்மில்..”.. வெளுத்து வாங்கிய முகமது ஷமி

“சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை.. நான் உச்சக்கட்ட ஃபார்மில்..”.. வெளுத்து வாங்கிய முகமது ஷமி

29 வயதான சாய் கிஷோர் இதுவரை 62 முதல்தர போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி தொடரில் குளோஸ்டர்ஷயர் அணிக்காக 6 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இவர், தற்போது ரஞ்சி கோப்பையிலும் தமிழக அணியின் வெற்றி நாயகனாக ஜொலிக்கிறார்.

Also Read

"வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடுக்கிப்பிடி திட்டம் வைத்திருக்கிறோம்".. நியூசிலாந்து பவுலர் டஃபி வார்னிங்
Story first published: Wednesday, October 21, 2026, 10:49 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+