Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘யாருமே கவனிக்கல’.. ஐபிஎல்-ல் சத்தமே இல்லாமல் சாதித்த இளம் வீரர்.. தேடிபிடித்து புகழ்ந்த சேவாக்!

டெல்லி: ஐபிஎல் தொடரில் சத்தமே இல்லாமல் சாதித்த இளம் வீரர் குறித்து முன்னாள் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இதுவரை இல்லாத வகையில் அனுபவ வீரர்களை காட்டிலும் இளம் வீரர்கள் அதிக கவனத்தை ஈர்த்தனர்.

தனி கவனம்

தனி கவனம்

இந்த சீசனில் பேட்டிங்கை பொறுத்தவரை ருத்ராஜ் கெயிக்வாட், பட்டிக்கல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் பவுலிங்கில் புது முகங்கள் அசத்தினர். குறிப்பாக ஆர்சிபி அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் இந்த சீசனில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக திகழ்கிறார்.

டெல்லி அணி வீரர்

டெல்லி அணி வீரர்

ஹர்ஷல்பட்டேல் குறித்து பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இவருக்கு அடுத்த இடத்தில் சத்தமே இல்லாமல் ஒரு வீரர் சாதித்துள்ளார். டெல்லி அணியை சேர்ந்த ஆவேஷ் கான் தான் அவர். இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு போட்டியில் 2 - 3 விக்கெட்களை எடுத்து சென்றார்.

கவனிக்கப்படாத வீரர்

கவனிக்கப்படாத வீரர்

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், டெல்லி அணியில் ரபாடா, அஸ்வின், அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா ஆகிய பவுலர்கள் பற்றிதான் அதிகம் பேசப்பட்டது. ஆனால் சிறப்பாக செயல்படும் ஆவேஷ் காணை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அவர் சத்தமே இல்லாமல் வந்து ஒவ்வொரு போட்டிகளிலும் 2 -3 விக்கெட்களை கைப்பற்றினார்.

சேவாக் புகழாரம்

சேவாக் புகழாரம்

அவர் குறித்து எந்த பேச்சுகளும், எழுதப்பட்டது போன்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அதை பற்றி எதையும் கண்டுக்கொள்ளாமல் தனது பணியை சிறப்பாக மேற்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம், மிடில், முடிவு என 3 பகுதிகளிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் அவர். பந்தின் வேகம், திசை என அனைத்திலும் வித்தியாசம் காட்டக்கூடியவர். இந்த ஐபிஎல்-ல் உற்று கவனிக்கப்பட்ட வீரரில் அவரும் ஒருவர் என சேவாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 6, 2021, 20:45 [IST]
Other articles published on May 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+