For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே எதிர்பார்க்காத பக்கா தொடக்கம்; கோலி போட்ட "தப்புக் கணக்கு" - கடைசியில் வேலையைக் காட்டிய SRH

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் இதுவரை இல்லாத அளவுக்கு ஓரளவு பொறுப்புடன் விளையாடி இருக்கிறது (!!?). அப்படின்னு சொல்லணும்-னு ஆசை தான். ஆனால், என்னத்த சொல்ல!

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.6) நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்துள்ளது.

 ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

அபுதாபியில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலி (c), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றனர். அதேபோல், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், ரிதிமான் சாஹா (wk), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றனர்.

 ரன் ரேட் வேண்டும்

ரன் ரேட் வேண்டும்

பெங்களூருவுக்கு இந்த போட்டியோடு சேர்த்து, 2 போட்டிகள் மீதமுள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று, கடைசியாக டெல்லியுடன் மோதும் போட்டியிலும் வென்றால், 20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப்புடன் சிஎஸ்கே தோற்றால், நிச்சயம் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துவிடும். ஐபிஎல்-லை பொறுத்தவரை பிளே ஆஃப் விதிமுறைகள் தெளிவாக அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி, 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் மோதிய போட்டியில் வெற்றிப் பெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிப் பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஸோ, முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பது என்பது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான விஷயமாகும். இதையெல்லாம் மனதில் வைத்து தான் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். காரணம், ஃபார்மிலேயே இல்லாத ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து, குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, அந்த இலக்கை குறைவான ஓவர்களில் சேஸ் செய்து மும்பையைப் போல ரன் ரேட்டை எகிற வைப்பதே கோலியின் வியூகமாகும்.

 ஏமாந்த அபிஷேக்

ஏமாந்த அபிஷேக்

இந்நிலையில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கமாக ரிதிமான் சாஹா, ஜேஸன் ராயுடன் தொடக்க வீரராக களமிறங்குவார். ஆனால், இன்றைய போட்டியில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா - ராய் கூட்டணி களமிறங்கியது. இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் ஜார்ஜ் கேர்டன் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து போட்டியின் சூழலை அப்படியே மாற்றினார். இந்த ஓவரில் நான்காவது பந்தில், deep backward square leg-ல் அபிஷேக் தூக்கி அடித்தார். பந்து சிக்ஸ் லைனுக்கு கொஞ்சம் முன்பாகவே லேண்ட் ஆக, சிராஜ் அதனை கேட்ச்சாக முயன்றார். அது ஈஸியான கேட்ச் என்று கூற முடியாது; ஆனால் தவறவிடக் கூடாத கேட்ச். நிச்சயம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், சிராஜ் பந்தை கையில் வாங்கி பிறகு டைவ் அடித்ததால், அதனை தவறவிட்டார். எனினும், அடுத்த பந்தையே அபிஷேக் மீண்டும் தூக்கி அடித்தார். ஆனால், இம்முறை பந்து உயரமாக சென்றதே தவிர, தூரம் செல்லவில்லை. சர்க்கிலின் உள்ளே உயர பறந்த பந்தை டென்ஷனே இன்றி கேட்ச்சாக்கினார் மேக்ஸ்வெல். அபிஷேக் ஏமாந்து வெளியேறியினார்.

Recommended Video

RCB vs SRH SunRisers Hyderabad Beat RCB By 4 Runs In Thriller | Oneindia Tamil
 நாங்க எங்கேயும் போகல

நாங்க எங்கேயும் போகல

இதையடுத்து 2வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் - ஜேஸன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். எனினும், ஹர்ஷல் படேல் வீசிய ஸ்லோ பந்தில் வில்லியம்சன் 31 ரன்களில் போல்டானார். பிறகு, ப்ரியம் கார்க் 15 ரன்களில் கிறிஸ்டியன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த ஜேஸன் ராய், கிறிஸ்டியன் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு சமத் ஒரேயொரு ரன்னில், சாஹல் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இப்படி வெறும் 2 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, "நாங்க எங்கேயும் போகல; அதே SRH தான்" என்று நிரூபித்தது.

 ஏமாற்றிய சாஹா

ஏமாற்றிய சாஹா

16 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ரிதிமான் சாஹா, ஜேஸன் ஹோல்டர் இருந்தனர். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தால், நிச்சயம் 150 - 160 வரை ரன்கள் எடுக்க வாய்ப்பிருந்ததாக கருதப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா என்பது போல், சாஹா வெறும் 10 ரன்களில் தூக்கி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Wednesday, October 6, 2021, 21:29 [IST]
Other articles published on Oct 6, 2021
English summary
SRH Set 142 runs target to rcb ipl 2021 - விராட் கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+