அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண, மும்பை அணியின் பும்ரா நேரில் வந்தார். காயம் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடாததால், மும்பை அணியின் பந்துவீச்சு பரிதாபமாக உள்ளது. அதனை வடசென்னை படத்தில் வில்லன் கிஷோரின் மனைவி சமுத்திரகனியிடம், நல்லா இருக்கியாணே? என்று கேட்பார். அதற்கு நல்லா இருக்கேன் என்று சமுத்திரகனி பதில் அளிப்பார். ஆனால் மீண்டும் கிஷோரின் மனைவி, "நாங்க நல்லா இல்லணே" என்று பதில் அளிப்பார். இதனை அப்படியே கிஷோரின் மனைவியாக மும்பை ரசிகர்களையும், சமுத்திரகனியாக பும்ராவையும் வைத்து, "ஆனா நாங்க நல்லா இல்லணே" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

மும்பை அணிக்கு 208 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்தது. இதனால் ரோகித் சர்மா பொறுப்பேற்று அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 பந்துகளுக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனை குட்டி பகவதி வடிவேலு மாமன் - மச்சானிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கிவிட்டு, "சின்ன ஃபைட்ரா.. 20 பேரு.. வச்சு திருப்பு திருப்புனு திருப்புனுல ஓடிட்டாங்கல்ல" என்று வசனம் பேசுவார். அந்த வடிவேலுவாக ரோகித் சர்மாவை மாற்றி, "ஒன்னும் இல்லடா.. WTC இறுதிப்போட்டி அணி ரிலீஸ் ஆச்சுல.. அதான் ஒரு சின்ன பிராக்டீஸ்ரா" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

அதேபோல் மும்பை அணியின் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் 21 பந்துகளில் விளையாடி 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனை கந்தசாமி படத்தில் வடிவேலு அல்வா சீனுவிடம், "எவ்வளவு பெரிய வேலைய பாத்துருக்க நீயி" என்று பேசி இருப்பார். இதனை அப்படி மாற்றி மும்பை ரசிகர்கள் இஷான் கிஷனிடம், "208 சேஸ்ல என்னடா வேலைய பாத்துருக்க நீயி" என்று உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்களில் ஒருவர் கூட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் விளையாடவில்லை. சென்னை 28 இரண்டாம் பாகத்தில், தோல்வியடைந்த ஷார்க்ஸ் அணியை பார்த்து அரவிந்த் கதாபாத்திரம் "கிரிக்கெட்டாடா ஆடுறீங்க.. எல்லாரும்..தோற்கனும்னே ஆடுறீங்க.. போங்கடா டேய்" என்று வசனம் பேசுவார். அதனை அப்படி மும்பை ரசிகர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை பார்த்து, "ஸ்ட்ரைக் ரேட்லாம் பாருங்க டா.. 200 சேஸ் மாதிரியாடா ஆடுனீங்க எல்லாம்.. போங்கடா டேய்" என்று உருவாக்கப்பட்ட மீம் ஒவ்வொரு மும்பை ரசிகனின் குமுறல்.

அதேபோல் வளர்த்த கிடா மாரில் பாய்ந்த கணக்காக வளர்த்துவிட்ட மும்பை அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி 2 புள்ளிகளை வென்றுள்ளது. இதனை வின்னர் படத்தில் வரும் வடிவேலுவை அடிக்கும் தம்பி பிரசாந்திடம், அண்ணன் பா.. என்று சொல்லும். அதற்கு "அதுனாலதான் அடிச்சேன்" என்று பிரசாந்த் சொல்லுவார். அதனை அப்படியே ரோகித் சர்மாவாக வடிவேலுவையும், பிரசாந்தாக ஹர்திக் பாண்டியாவையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் கலக்கல்.