Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜூன் டெண்டுல்கர் எங்கப்பா.. "கமான் கமான்".. ஆவலோடு காத்திருக்கும் டிவிட்டர்!

சென்னை: அர்ஜூன் டெண்டுல்கரை கலாய்ப்பதற்காகவே ஒரு பெரும் கூட்டம் டிவிட்டரில் குத்த வைத்துக் காத்திருக்கிறது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் போட்ட டிவீட்டால் ஒரே நாளில் அவருக்கு எதிராக பலரும் திரும்பி விட்டனர். இப்போது அது அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மீதும் திரும்பியுள்ளது.

அர்ஜூன் டெண்டுல்கர் மீதும் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். காரணம், அவரை விட சிறந்த இளம் வீரர்கள் பலர் இருக்க அர்ஜூனுக்கு ஐபிஎல்லில் வாய்ப்பா என்று பலரும் கேட்கின்றனர்.

சச்சின் மகன் அர்ஜூன்

சச்சின் மகன் அர்ஜூன்

இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய ஏலத்தில் யாரால் வாங்கப்படவுள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடிப்படை விலை ரூ. 20 லட்சம்தான். அந்த விலைக்கே அவர் போவார் என்று எதிர்பார்க்க்படுகிறது. அதேசமயம், அவரை யாரும் வாங்க வாய்ப்பில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஒரு வேளை அர்ஜூனை வாங்குவதாக இருந்தால் பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் அணியே அவரை வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யார் வாங்கினாலும் சரி நாங்க கலாய்க்காமல் வீடு திரும்ப மாட்டோம் என்று பலரும் ஏலத்தை உற்று நோக்கியபடி காத்திருக்கிறார்கள்.

டிரெண்ட்

டிரெண்ட்

டிவிட்டரில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயரும் டிரெண்ட் ஆகியுள்ளது. ஒருத்தர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரை பாஜக வாங்கி விட்டது. அர்ஜூன் டெண்டுல்கரை அம்பானி வாங்குவார் என்று.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ்

சினிமா பாணி கதை

சினிமா பாணி கதை

இந்த டிவீட்தான் செம.. அதாவது அர்ஜூன் டெண்டுல்கரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்குமாம். எடுத்து விட்டு ஒரு போட்டியில் கூட ஆட விடாமல் சச்சின் டெண்டுல்கரை பழிவாங்குமாம். ஒரு குட்டி சினிமாவையே எடுத்து விட்டார் இந்த ஒற்றை டிவீட் மூலம் இந்த நபர்.. செம கற்பனைதான்

ஓடிருவேன்

ஓடிருவேன்

இன்னொருவர் இப்படி கொந்தளித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர வேறு எந்த அணியாவது அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தால் நான் டிவிட்டரை விட்டே வெளியேறி விடுவேன் என்று கோபமாக கூறியுள்ளார் இந்த அன்பர். இவருக்கு ஏன் அர்ஜூன் மீது இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. ஆக மொத்தம் விளையாடாமலேயே டிரெண்ட் ஆகி விட்டார் அர்ஜூன்.

Story first published: Thursday, February 18, 2021, 18:44 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+