குவாலிபையர் 2 - மும்பை, குஜராத் போட்டியை தடுக்கும் மழை.. ஆட்டம் ரத்தானால் பைனலுக்கு செல்வது யார்?
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபையர் 2வில் இன்று மும்பையும் குஜராத் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது . இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு அகமதாபாத்தில் லேசாக மழை தூரல் இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக மலை தற்போது வேகமாக பெய்து வருகிறது.
இதனால் திட்டமிட்டபடி போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், உலகத்தர வசதிகள் இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் சீக்கிரம் வெளியேறும் வசதியும் இருக்கிறது.

ஒரு வேலை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், எந்த அணி இறுதுப் போட்டிக்கு முன்னேறும் என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு சீசனில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி எது என்று பார்க்கப்படும்.
அதை வைதது பார்க்கும் போது, மும்பையை விட குஜராத் அணி தான் அதிக போட்டியில் வென்று இருக்கிறது. இதனால் போட்ரத்து செய்யப்பட்டால், குஜராத் அணி தான் பைனலுக்கு செல்லும். ஒரு வேலை , மழை பெய்து, போட்டி தாமதமாக தொடங்கப்பட்டால் கள சூழல் மும்பைக்கு சாதகமக மாறிவிடும்.
அதற்கு காரணம், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்தால், சுழற்பந்துவீச்சு சுத்தமாக எடுப்படாது. குராத் அணியின் பலமே ரஷித் கானும், நூர் அகமது தான். இதனால், மும்பை பேட்ஸ்மேன்களுக்கு அவர்களை எதிர்கொள்ள எந்த சிரமும் இருக்காது. இதனால், மழை இன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், மைதானம் தொடர்பாக 7.20 மணிக்கு நடுவர்கள் ஆய்வு நடத்தி, 7.40 மணிக்கு டாஸ் வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டம் முழு 20 ஓவரும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்டம் 5 ஓவராக நடத்த கட் ஆஃப் நேரம் இரவு 10.55 மணியாகும். இதனால் மழை பெய்ய கூடாது என்று மும்பை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கடவுள்களிடம் வேண்டி வருகின்றனர். இந்தப் போட்டிக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications