Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2027: உலககோப்பையை வாங்கிய இந்திய வீராங்கனையை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்

கொச்சி: மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில், மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை சனிகா சால்கேவை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 20 வயதான இந்த இடதுகை பேட்டரை, அவருடைய அடிப்படை விலையான ரூ. 10 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பிறந்த சனிகா சால்கே, மும்பை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் ஒரு முக்கிய வீராங்கனையாவார். இடதுகை பேட்டரான இவர், வலதுகை ஆஃப்-பிரேக் மற்றும் லெக்-பிரேக் பந்துவீசும் திறன் கொண்டவர். மும்பை மகளிர் அணியின் மேல் வரிசையில் களமிறங்கும் இவர், அணியின் தேவைக்கேற்ப பந்துவீச்சிலும் பங்களிக்கும் திறமை கொண்டவராகத் திகழ்கிறார்.

Sanika Chalke

உள்ளூர் போட்டிகளில் காட்டிய சிறந்த செயல்பாட்டின் மூலம் இந்திய மகளிர் யு-19 அணியில் சனிகா இடம் பிடித்தார். மேலும் மூத்தோர் மகளிர் டி20 டிரோபி தொடர்களிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் இவரிடம், மைதானத்தின் இடைவெளிகளைக் கணித்து ரன் எடுக்கும் நுட்பமும் உள்ளது. தனது சொந்த மைதானமான மும்பையில் விளையாடுவது தொடரின் ஆரம்பக்கட்ட அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீராங்கனைகள் பட்டியல்

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீராங்கனைகள் பட்டியல்

2025 ஐசிசி மகளிர் யு-19 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு சனிகாவின் சிறப்பான ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. அத்தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் ரன் குவித்து அசத்தினார்.

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அணி வாரியாக வாங்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல்

Also Read

WPL 2027: மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அணி வாரியாக வாங்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல்

அதில் ஜனவரி 26 அன்று வங்கதேசத்திற்கு எதிராக 11*, ஜனவரி 28 அன்று ஸ்காட்லாந்திற்கு எதிராக 29*, ஜனவரி 31 அன்று நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்திற்கு எதிராக 11* மற்றும் பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 26* ரன்களை விக்கெட் இழக்காமல் எடுத்தார். முக்கிய போட்டிகளில் நெருக்கடியான சூழலிலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடும் இவரது திறன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Story first published: Wednesday, October 28, 2026, 21:38 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+