Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு ஒரு கங்குலி கிடைச்சிட்டாரு.. சீக்கிரம் தொடக்க வீரராக வர உள்ள ஜெய்ஷ்வால்.. காரணம் ஏன்?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே தொடக்க வீரர்கள் சூப்பர் ஸ்டார் ஆக தான் இருந்திருக்கிறார்கள். கங்குலி- சச்சின், சச்சின் - சேவாக், ரோகித் சர்மா- ஷிகர் தவான் என தலைமுறை தலைமுறையாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஷிகர் தவான் தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு மாற்று வீரராக யாரும் அணிக்குள் வரவில்லை. ரோகித் சர்மாவுக்கும் தற்போது 36 வயதாகிவிட்டது.
இதனால் அவரும் ஓய்வு பெற்று விட்டால் சுப்மன் கில்லுக்கு ஜோடியாக இந்திய அணி யாரை தேர்ந்தெடுக்கும் என்ற கேள்வி எழுந்தது.

 Young star Yashasvi Jaiswal is on the rise- Here is the achievement done by young prodigy

அதற்கு தற்போது விடை கொடுத்திருக்கிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஸ்வால், 19 வயது வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் உலகக்கோப்பை அண்டர் 19 தொடரில் சதம் விளாசினார். இதேபோன்று ரஞ்சிக்கோப்பையிலும் சதம் அடித்த ஜெய்ஷ்வால், இராணி கோப்பை, துலிப் கோப்பை, விஜய் ஹ்சாரே தொடர் ஆகிய அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்திருக்கிறார்.

இதேபோன்று இந்திய ஏ அணிக்காக விளையாடிய ஜெய்ஷ்வால் 3 இலக்க ரன்களை தொட்டிருக்கிறார். தற்போது 21 வயது ஆன நிலையில் ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார். 62 பந்துகளை எதிர் கொண்ட ஜெய்ஸ்வால் 124 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 16 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களும் அடங்கும். இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய ஜெயஸ்வால், நான் சரியான திட்டமிட்டு இன்றைய ஆட்டத்தை எதிர்கொண்டு விளையாடினேன்.

இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு பகுதியையும் நான் மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டேன்.நான் ஆடிய ஷாட்டுகளை எல்லாம் பயிற்சி மேற்கொண்டு நான் பயிற்சி செய்யும்போது சரி போட்டியில் விளையாடும்போதும் சரி ஒரே மாதிரியாக தான் மனதை நினைப்பேன். அணிக்காக தொடர்ந்து பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷ்வால் கூறினார். ஜெய்ஸ்வாலின் இந்த அபார ஆட்டத்தால் அவர் இந்திய அணியில் விரைவில் இடம் பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 30, 2023, 23:15 [IST]
Other articles published on Apr 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+