நான் ஒரே பிசி!! டி20 அணியில் இருந்து தாராளமா நீக்குங்க.. இப்ப என்ன குறைஞ்சு போச்சு?

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கபடி களத்தில் நின்று இருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இது என்ன புதுசா! என பார்த்தால் புரோ கபடி லீக் தொடருக்கான விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறாராம் தோனி.

தோனி டி20 அணியில் இருந்து நீக்கினாலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செம பிசியாக இருக்கிறார் நம் தோனி.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

தோனி ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார். தன் அனுபவத்தால் விக்கெட்களை வீழ்த்த உதவியாக இருக்கிறார். எனினும், அவரது சிறப்பாக கருதப்படும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதையடுத்து டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார் தோனி. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

செம பிசியாக இருக்கிறார்

செம பிசியாக இருக்கிறார்

சரி, அணியில் இடம் கிடைக்கவில்லை, தோனி இனி ஒருநாள் போட்டிகள் ஆடிய நேரம் போக பயிற்சி செய்வார் அல்லது ஓய்வில் இருப்பார் என பார்த்தால், மனிதர் இப்போது தான் முன்பை விட செம பிசியாக இருக்கிறார்.

நிர்வாக கூட்டத்தில் தோனி

நிர்வாக கூட்டத்தில் தோனி

கடந்த வாரத்தில் தோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் அந்த நிறுவனத்தில் கௌரவ பதவியில் இருக்கிறார். முதல் முறையாக அங்கே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார் தோனி.

[தோனியை புரிஞ்சுக்கவே முடியலையே! அங்க ஏன் போனாரு? கிரிக்கெட் "போர்" அடிச்சுருச்சோ! ]

விளம்பர தூதராக தோனி

இது நடந்து முடிந்த சில நாட்களில், இந்தியாவின் பிரபல திருமண சேவை இணையதளத்தோடு விளம்பர தூதராக தோனி ஒப்பந்தம் செய்து கொண்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

[கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா? இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க]

மக்கள் செல்வாக்கு

மக்கள் செல்வாக்கு

தற்போது புரோ கபடி லீக் விளம்பரத்தில் பங்கேற்றுள்ளார் தோனி. கிரிக்கெட்டில் சறுக்கினாலும், தோனியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை விளம்பர நிறுவனங்கள் புரிந்து கொண்டு அதை காசாக்கி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும், அதை புரிந்து கொண்டதோ எனவும் தோன்றுகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என!!

[லோக்சபா தேர்தலில் தோனி, கம்பீர்.. தெற்கை வளைக்க தோனி.. ஸ்கெட்ச் போடும் பிஜேபி ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni playing Kabaddi in a ad shooting after he was dropped in T20 squads
Story first published: Wednesday, November 14, 2018, 12:37 [IST]
Other articles published on Nov 14, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X