Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னைக்கு இந்த விஷயம் துண்டா தெரியும்.. கோலியின் பலவீனத்தை உடைத்த முன்னாள் வீரர்.. கதை முடிந்தது!

சென்னை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஒரே ஒரு விஷயம்தான் பார்ப்பதற்கு மிக சிறப்பாக இருக்கும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியாவுல 8 நியூசிலாந்து வீரர்கள் இருக்காங்க.... அவங்களோட பாதுகாப்பு குறித்து பிரதமர் கேள்வி

இந்நிலையில் இன்றைய போட்டியில் கோலி பும்ரா ஆகியோருக்கு இடையே நடக்கும் போட்டிதான் மிக சுவாரஸ்யமான ஒன்று என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பலப்பரீட்சை

பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியும் - முதல் முறையாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி அணியும் இன்று மோதவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா மோதிக்கொள்வதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால் இரு அணிகளின் போட்டிகளை விராட் கோலிக்கு எதிராக பும்ரா செயல்படவிருப்பதுதான் சிறப்பாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இதுகுறித்து பேசியுள்ள அவர், இங்கிலாந்து தொடருக்கு பிறகு கோலி சிறந்த ஃபார்மில் ஒப்பனிங் களமிறங்குகிறார். அவருக்கு எதிராக முதல் பந்தை வீசப்போகும் பும்ரா விடுமுறைக்கு பின்னர் களம் காணுகிறார். எனவே இரு சிறந்த வீரர்களுக்கு இடையேயான போட்டி இது. ஏனென்றால் விராட் கோலியின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் பும்ரா. கோலியின் விக்கெட்டை எடுக்கக்கூடியவர்.

 சரியான போட்டி

சரியான போட்டி

விராட் கோலி பேட்டிங்கிற்கு களமிறங்கும் போதெல்லாம், ரோகித் சர்மா பும்ராவை தான் ஓவர் வீச அழைப்பார். பும்ராவின் பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து விராட் கோலி 2 -3 முறை அவுட்டாகியுள்ளார். வழக்கமாக விராட் கோலி இதுபோன்று அவுட்டாக மாட்டார். ஆனால் பும்ராவிடம் மட்டும் அடித்து ஆட முயற்சித்து தவறான ஷாட்களால் அவுட்டாகி வெளியேறுவார். இன்று அது போன்ற ஒரு போட்டிதான் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓப்பனிங் களமிறங்கிய விராட் கோலி, சிறப்பாக ஆடினார். மேலும் ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் தான் ஆடப்போவதாகவும் அறிவித்தார். கடந்த 2016ம் ஆண்டு ஓப்பனிங் களமிறங்கிய விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சாதனையை படைத்தார். அவர் அந்த தொடரில் 973 ரன்களை குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும். எனவே இந்த தொடரிலும் அந்த அதிரடி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Friday, April 9, 2021, 16:02 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+