Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- ரோகித் நீக்கம்.. மும்பை அணியிலிருந்து விலகினாரா சச்சின்? திரை மறைவில் நடந்தது என்ன?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தற்போது வெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மும்பை அணி பல ரசிகர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ரோகித் சர்மாவால் ஐந்து ஐபிஎல் கோப்பையை மும்பை அணி நிர்வாகம் அவரை மரியாதையாக நடத்தவில்லை என்ற ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரோகித் சர்மா நீக்கப்பட்டதை மும்பை அணி வீரர்களே விரும்பவில்லை.

IPL 2024 - Fact check -Did Sachin tendulkar resigned his mentor post from MI- Here is the truth

பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் அணியின் காட்பாதர் போல் விளங்கும் சச்சின் டெண்டுல்கர் அந்த அணியின் மென்டர் பதவியில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியானது.

ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சச்சின் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சச்சினின் சேவையை பாராட்டி நீதா அம்பானி, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியது. ஆனால் இது போலி செய்தியாகும். அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்பதுதான் உண்மை.

ரோகித் சர்மா நீக்கப்பட்டதால் சச்சின் பதவி விலக காரணமே இல்லை. மேலும் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடி வரும் நிலையில் சச்சின் ஏன் இந்த முடிவை எடுக்கப் போகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சச்சினை மையமாக வைத்து தான் மும்பை அணியே உருவாக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மாவுக்காக அவர் இந்த முடிவை எடுத்ததாக பரப்பப்பட்ட செய்தி பொய் ஆகும்.

மேலும் சச்சின் டெண்டுல்கும் அம்பானி குடும்பத்தினருக்கும் பிரிக்க முடியாத நட்பு இருக்கிறது. அம்பானி குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சச்சின் ஒரு குடும்ப உறுப்பினர் போல் கலந்து கொள்வார். இதனால் இந்த முடிவை சச்சின் கனவில் கூட எடுக்க மாட்டார். இதே போல் அம்பானி குடும்பமும் சச்சினை அந்த பதவியில் இருந்து நீக்காது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, December 17, 2023, 20:36 [IST]
Other articles published on Dec 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+