Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜம்மு & காஷ்மீர் "புயல்".. உம்ரான் மாலிக் முதல் ஐபிஎல் விக்கெட் - நிறைவேறிய ஒரு குடும்பத்தின் கனவு

அபுதாபி: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு 142 ரன்கள் இலக்கை எட்ட தட்டுத் தடுமாறி வருகிறது.

Recommended Video

Who is Umran Malik : India-வையே திரும்ப பார்க்க வைத்த காய்கறி வியாபாரியின் மகன்

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.6) நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூரு தற்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.

 பின்வாங்கும் சிஎஸ்கே

பின்வாங்கும் சிஎஸ்கே

பெங்களூருவுக்கு இந்த போட்டியோடு சேர்த்து, 2 போட்டிகள் மீதமுள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று, கடைசியாக டெல்லியுடன் மோதும் போட்டியிலும் வென்றால், 20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பஞ்சாப்புடன் சிஎஸ்கே தோற்றால், நிச்சயம் பெங்களூரு இரண்டாம் இடம் பிடித்துவிடும். ஐபிஎல்-லை பொறுத்தவரை பிளே ஆஃப் விதிமுறைகள் தெளிவாக அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டியில் தோற்கும் அணி, 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் மோதிய போட்டியில் வெற்றிப் பெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிப் பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஸோ, முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பது என்பது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான விஷயமாகும். இதையெல்லாம் மனதில் வைத்து தான் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். காரணம், ஃபார்மிலேயே இல்லாத ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து, குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, அந்த இலக்கை குறைவான ஓவர்களில் சேஸ் செய்து மும்பையைப் போல ரன் ரேட்டை எகிற வைப்பதே கோலியின் வியூகமாகும்.

 தடுமாறிய SRH

தடுமாறிய SRH

இந்நிலையில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், 2வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் - ஜேஸன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். எனினும், ஹர்ஷல் படேல் வீசிய ஸ்லோ பந்தில் வில்லியம்சன் 31 ரன்களில் போல்டானார். பிறகு, ப்ரியம் கார்க் 15 ரன்களில் கிறிஸ்டியன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த ஜேஸன் ராய், கிறிஸ்டியன் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு சமத் ஒரேயொரு ரன்னில், சாஹல் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, சாஹா வெறும் 10 ரன்களில் தூக்கி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

எளிதான டார்கெட்டை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அட்டகாசமான பவுண்டரி அடித்து ஆட்டத்தை துவக்கிய கேப்டன் கோலி, அதே ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, மீண்டும் ஒன் டவுன் களமிறக்கப்பட்ட டேனியல் கிறிஸ்டியன், மீண்டும் பெரும் ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் ரன்னே எடுக்காமல் அவுட்டான கிறிஸ்டியன், இப்போட்டியில் ஜஸ்ட் 1 ரன் மட்டும் எடுத்து, கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 18 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஜம்மு & காஷ்மீர் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார். 12 ரன்களில் ஸ்ரீகர் பரத், உம்ரான் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார்.

 மணிக்கு 153.கி.மீ வேகம்

மணிக்கு 153.கி.மீ வேகம்

ஐபிஎல் தொடரில், உம்ரான் மாலிக் கைப்பற்றும் முதல் விக்கெட் இதுவேயாகும். ஐபிஎல் தொடரிலேயே இதுதான் அவரது இரண்டாவது போட்டியாகும். அவர் வீசிய முதல் ஓவரில், பெரும்பாலான பந்துகள் மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் பறந்தன. அப்படியொரு வேகமான பவுன்ஸ் பந்தில் தான் பரத் அவுட்டானார். அதற்கு அடுத்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் பந்துகள் அனைத்தும் என்று மணிக்கு 151, 152, 153 கி.மீ வேகத்தில் தெறித்தன.

Story first published: Wednesday, October 6, 2021, 23:01 [IST]
Other articles published on Oct 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+