16 வயது நாகாலாந்து வீரருக்கு போன் செய்து.. வர சொன்ன மும்பை அணி.. காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!
மும்பை: நாகாலாந்தை சேர்ந்த வீரர் ஒருவருக்கு மும்பை அணி நிர்வாகம் போன் செய்து அழைப்பு விடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் அதிரடியாக ஆட கூடியது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வலுவான அணியாக மும்பை உள்ளது.
பல இளம் வீரர்களை கண்டுபிடிப்பதும், அவர்களுக்கு முறையாக வாய்ப்பு வழங்கி தொடர்ந்து ஊக்குவிப்பதும்தான் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி அதிகம் கவனிக்கப்படும்.

மும்பை
2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மும்பையில் இருந்து ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கவுண்டர் நைல், மிட்சல் மெக்லாங்கன், லசித் மலிங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் பவுலர்கள். உலகத்தரமான பவுலர்கள் மும்பை அணியில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரை மட்டும் மும்பை அணி நீக்கி உள்ளது.

நீக்கம்
மும்பை அணியில் கடந்த சீசனில் இவர்கள் பெரிதாக வாய்ப்பு பெறவில்லை. அந்த அணியில் ஏற்கனவே சிறந்த பவுலர்கள் பலர் உள்ளனர். இதனால் இவர்கள் நான்கு பேரும் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

காரணம்
இப்படிப்பட்ட நிலையில் தற்போது நாகாலாந்தை சேர்ந்த வீரர் ஒருவருக்கு மும்பை அணி நிர்வாகம் போன் செய்து அழைப்பு விடுத்துள்ளது. நாகாலாந்து அணிக்காக சையது முஷ்டாக் தொடரில் இந்த வருடம் அறிமுகம் ஆன வீரர் க்ரிவிட்சோ கேன்ஸ். கடந்த ஜனவரியில்தான் இவர் முதல் தர போட்டியில் அறிமுகம் ஆனார்.

வாய்ப்பு
இந்த நிலையில் இவரை போன் செய்து மும்பை அணி அழைத்துள்ளது. சையது முஷ்டாக் கோப்பையில் இவர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். நாகாலாந்து அணிக்காக இவர் கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்தார். 4-0-19-1, 3.2-0-27-3, 4-0-16-3, 4-0-22-0 இதுதான் கடைசி நான்கு போட்டிகளில் இவர் பவுலிங் பிகர் ஆகும்.

சிறப்பு
சிறப்பாக பவுலிங் செய்து வரும் இவர் மும்பை அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் மும்பை அணியில் இவரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை போன் செய்து அழைத்துள்ளது. இவர் மும்பை அணியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications