23 ஆண்டுக்கு பின் சாதனை படைத்த ஆஸி..!! 41 ரன்களில் பாக்.கை வீழ்த்தி அபாரம்

WORLD CUP 2019 AUS VS PAK | 41 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

டான்டன்:உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். இருவரின் ஆட்டத்திலும் பொறுப்பு தென்பட்டது. தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய கேப்டன் பின்ச்.. பின் அதிரடிக்கு மாறினார். 84 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த ஜோடி 146 ரன்கள் குவித்தது.

டிராவிட் போல இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ராகுல்.. நியூசிலாந்தை சமாளிப்பாரா?

23 ஆண்டு சாதனை

23 ஆண்டு சாதனை

முதல் விக்கெட்டுக்கு ஆஸி. அணியில் 146 ரன்கள் குவித்தது சாதனையாகும். அதாவது 23 ஆண்டுகள் ஆஸி. அணியின் தொடக்க வீரர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருக்கிறது ஆஸி. அடுத்து களமிறங்கிய ஸ்மித் 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

அதிரடி காட்டிய வார்னர்

அதிரடி காட்டிய வார்னர்

இருப்பினும், தொடக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.

3வது முறையாக ஆல் அவுட்

3வது முறையாக ஆல் அவுட்

முன்னதாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே ஆல் அவுட்டாகியது. தற்போது, 3வது முறையாக பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் ஆல் அவுட்டாகி இருக்கிறது.

மற்ற ஆல் அவுட்டுகள்

மற்ற ஆல் அவுட்டுகள்

இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி 3 போட்டியில் ஆல் அவுட்டானது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. 316 ரன்களுக்கும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில 288 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.

307 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

307 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இப்போட்டியில் 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 7 ஓவரில் வெறும் 30 ரன்கள் கூடுதலாக சேர்த்தது. 6 விக்கெட்டுகளை இழந்தது. 350 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரன் விகிதம் அதன் காரணமாக சரிந்து, 307 ரன்களானது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

அடுத்து 308 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பாக்கர் ஜமான் 3வது ஓவரில் டக் அவுட்டானார். பின்னர் அணியின் ஸ்கோர் 56 ரன்களாக இருந்த போது பாபர் ஆசம் வெளியேறினார்.

இமாம் 53 ரன்கள்

இமாம் 53 ரன்கள்

3வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்கும், சர்பிராஸ் அகமதுவும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர். ஆனால்... அவர்களின் ஜோடி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. 53 ரன்கள் எடுத்த இமாம் உல் ஹக், கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார்.

பேட்டிங்கில் சரிவு

பேட்டிங்கில் சரிவு

அடுத்த 24 ரன்கள் சேர்ப்பதற்குள் பாகிஸ்தான் பேட்டிங்கில் பெரும் சரிவு. முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி என 3 விக்கெட்டுகள் காலி. மீண்டும் நெருக்கடியில் சிக்கியது பாகிஸ்தான். 7வது விக்கெட்டுக்கு சர் பிராசும், ஹசன் அலியும் ஓரளவு நம்பிக்கை தந்தனர்.

அருமையான ஆட்டம்

அருமையான ஆட்டம்

ஆனால் அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்கோர் 200 ரன்களை எட்டிய போது, ஹசன் அலி அவுட். கிட்டத்தட்ட போட்டி முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கும்போது பாக். மீண்டும் கம் பேக். 8வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமதுவுடன் கை கோர்த்த, வஹாப் அருமையாக ஆடினார்.

உறுதியானது தோல்வி

உறுதியானது தோல்வி

மீண்டும் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்ட அந்த தருணத்தில் வஹாப் ரியாஸ் விக்கெட்டை பறிகொடுக்க அணியின் தோல்வி உறுதியானது. பின்னர், 9வது விக்கெட்டாக முகமது அமீரும், கடைசி விக்கெட்டாக சர்பிராஸ் அகமதுவும் வீழ்ந்தனர்.

பட்டியலில் 2ம் இடம்

பட்டியலில் 2ம் இடம்

ஒரு கட்டத்தில் பாக். வெற்றிக் கோட்டை எட்டிவிடும் வகையில் ஆடியதால், அந்நாட்டு ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால். 266 ரன்களில் பாக். ஆல் அவுட்டானதால் சோகமடைந்தனர். 41 ரன்களில் வென்ற ஆஸ்திரேலியா, புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia won by 41 runs against Pakistan.
Story first published: Wednesday, June 12, 2019, 23:54 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X