For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க” பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ.

அதன்படி தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையில் டி20க்கு என தனி அணியும், ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு என தனி அணியும் செயல்பட்டு வருகிறது.

ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்! ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

பிசிசிஐ-ன் கோரிக்கை

பிசிசிஐ-ன் கோரிக்கை

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடரிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது பிசிசிஐ. அதாவது வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக வேண்டும் என்றால் வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது மிகவும் முக்கியமாகும். அதற்காக தான் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

என்ன காரணம்

என்ன காரணம்

அதாவது உலகக்கோப்பை திட்டத்திற்காக 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 20 வீரர்களையும் ஐபிஎல்-ல் தொடர்ச்சியாக ஆட வைக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும், என பிசிசிஐ கோரியது. ஆனால் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ-யால் உத்தரவிட முடியாது, அவர்கள் 2 மாதங்களுக்கு நாங்கள் ஒப்பந்தம் செய்த வீரர்கள் என ஐபிஎல் அணிகள் தடலாடியாக கூறிவிட்டன.

அவசர மீட்டிங்

அவசர மீட்டிங்

இந்நிலையில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ. அதில், ஆஸ்திரேலியா போன்ற அயல்நாட்டு வாரியங்கள், தங்களது வீரர்கள் இத்தனை ஓவர்கள் தான் பந்துவீச வேண்டும் என்ற நிபந்தனையுடன் ( NOC ) கொடுத்துள்ளன. எனவே இந்தியாவும் ஒரு 20 வீரர்களுக்கு அப்படி செய்யவுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு தர வேண்டும் என விவாதிக்கவுள்ளனர்.

முக்கிய சிக்கல்

முக்கிய சிக்கல்

பிசிசிஐ சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள், ஐபிஎல் அணிகளிலுடன் பயணிப்பார்கள். அந்த 20 வீரர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். சிறிது காயபாதிப்பு என்று தெரிந்தாலும் கூட, அவர்களுக்கு ஓய்வு தரக்கோரி அவர்கள் எச்சரிக்கை கொடுப்பார்கள் எனத்தெரிகிறது. இதனை ஐபிஎல் அணிகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3 பேரின் காயம்

3 பேரின் காயம்

இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முதல் காரணமாக இருந்தவர்கள், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹார் போன்ற முன்னணி வீரர்கள் தான். இவர்கள் மூவருமே டி20 உலகக்கோப்பையை தவறவிட்டனர். ஜடேஜா ஆஸ்திரேலியா தொடருக்கு வந்துவிடுவார் எனக் கூறப்படும் சூழலில், மற்ற இருவரின் நிலை இதுவரை தெரியாமலேயே உள்ளது.

Story first published: Tuesday, January 31, 2023, 12:00 [IST]
Other articles published on Jan 31, 2023
English summary
BCCI calls all the IPL franchises for a special meeting before IPL 2023, for the players work load issues
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X