For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பைனலில் இந்திய அணியை போட்டுத் தள்ள இப்பவே திட்டம் ரெடி.. முக்கிய வீரரை இறக்கிய ஆஸி. அணி!

Recommended Video

இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்த இப்போதே ஆஸ்திரேலியா திட்டம்

லண்டன் : ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை குறி வைத்து அணியில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று கிட்டத்தட்ட அதன் முடிவை எட்டி இருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நான்காவது அணியாக நியூசிலாந்து இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா இறுதிப் போட்டியில் மோத அதிக வாய்ப்புள்ளது. அதற்கான திட்டத்தில் ஆஸ்திரேலியா இப்போதே இறங்கியுள்ளது.

ஷான் மார்ஷ் காயம்

ஷான் மார்ஷ் காயம்

ஆஸ்திரேலிய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தங்கள் கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது மேக்ஸ்வெல் மற்றும் ஷான் மார்ஷ் காயமடைந்தனர். மேக்ஸ்வெல் குனமைடைந்து அடுத்த போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஷான் மார்ஷ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளனர்.

ஹேண்ட்ஸ்கோம்ப் ஏன்?

ஹேண்ட்ஸ்கோம்ப் ஏன்?

ஷான் மார்ஷுக்கு பதில் மாற்று வீரராக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்-ஐ அழைத்துள்ளது ஆஸ்திரேலியா. ஹேண்ட்ஸ்கோம்ப்-ஐ தேர்வு செய்ததன் பின்னணியில் தான் இந்திய அணிக்கு எதிரான திட்டம் உள்ளது என்கிறார்கள்.

இந்தியா - ஆஸி இறுதி

இந்தியா - ஆஸி இறுதி

உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நான்காம் இடத்தை பிடித்த அணியுடன் மோதும். அதே போல, இரண்டாம் இடம் பிடித்த அணி, மூன்றாம் இடம் பிடித்த அணியுடன் மோதும். அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத வாய்ப்பே இல்லை. இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் தான் இடம் பெறும்.

இந்திய அணிக்கு எதிராக..

இந்திய அணிக்கு எதிராக..

எனவே, இந்திய அணியை சமாளிக்கவே பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 628 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 11 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்றுள்ளார்.

ஹேண்ட்ஸ்கோம்ப் அபாரம்

ஹேண்ட்ஸ்கோம்ப் அபாரம்

மேலும், அவர் அடித்த நான்கு அரைசதங்களில் மூன்று, இந்திய அணிக்கு எதிராக கிடைத்தது. ஒரே ஒரு சதம் அடித்துள்ளார். அதுவும் இந்திய அணிக்கு எதிரானது தான். கடைசியாக , இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை வென்ற போதும் ஹேண்ட்ஸ்கோம்ப் சிறப்பாக விளையாடினார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்திய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தால், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி என்றாலே அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதால் ஆஸ்திரேலியா இந்த திட்டத்தை வகுத்து இருக்கலாம்.

Story first published: Friday, July 5, 2019, 17:04 [IST]
Other articles published on Jul 5, 2019
English summary
Cricket World cup 2019 : Shaun Marsh replaced by Peter Handscomb who played well against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X