For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தவங்களை எதிர்பார்த்து ஏமாந்து போன பாக்.. செமயாக கலாய்த்த முன்னாள் கேப்டன்!

லண்டன் : பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுமா? ஏதாவது வாய்ப்பு உள்ளதா என பாகிஸ்தான் ரசிகர்கள் இடைவிடாமல் கேட்டு வருகிறார்கள்.

அரை இறுதிக்கு முன்னேற மிகவும் சிக்கலான ஒரே ஒரு வழி மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.

அதே சூழ்நிலையை வைத்தே பாகிஸ்தான் அணியை கலாய்த்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப்.

பாக். ஊசலாட்டம்

பாக். ஊசலாட்டம்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் துவக்கம் முதலே சரியாக விளையாடவில்லை. பல போட்டிகளில் தோல்வி அடைந்த அந்த அணி இங்கிலாந்து அணியை மட்டுமே வீழ்த்தி இருந்தது. இந்திய அணியிடம் பெற்ற தோல்விக்குப் பின் சுதாரித்த அந்த அணி தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி இருந்தது. எனினும், அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகவில்லை.

கைவிட்ட இந்தியா, நியூசிலாந்து

கைவிட்ட இந்தியா, நியூசிலாந்து

லீக் சுற்றில் இந்தியா அல்லது நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும். இதற்காக பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். ஆனால், இரு அணிகளுமே பாகிஸ்தான் அணியை கைவிட்டன.

என்ன நிலைமை?

என்ன நிலைமை?

தற்போது பாகிஸ்தான் அணி, தன் கடைசி லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தினாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியை விட பின் தங்கி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழக்கும்.

நடக்காத காரியம்

நடக்காத காரியம்

பாகிஸ்தான் அணி அதிக நெட் ரன் ரேட்டில் வென்றால் நியூசிலாந்து அணியை முந்தி அரையிறுதிக்கு முன்னேறலாம். ஆனால், அது நடக்காத காரியம். காரணம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தால், அதுவும் சாத்தியமில்லை.

யூசுப் கலாய்

யூசுப் கலாய்

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் பாகிஸ்தானை கலாய்த்துள்ளார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால், வங்கதேச அணி மீது மின்னல் அடித்து அனைவரும் கீழே விழுந்தால் தான் அது முடியும் என்றார்.

இப்படி ஒரு சேஸிங்கா?

இப்படி ஒரு சேஸிங்கா?

மேலும், அனைவரும் ஒரே நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட வேண்டும். நாம் ஒரு ஓவரில் 10 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்று தன் அணியையே கலாய்த்தார் யூசுப்.

Story first published: Thursday, July 4, 2019, 17:20 [IST]
Other articles published on Jul 4, 2019
English summary
Cricket World cup 2019 : Pakistan’s Semi final chances in world cup has dimmed out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X