For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரிவில் இருந்து மீண்ட கொல்கத்தா.. ப்ரித்வி ஷா அதிர்ச்சி.. “சூப்பர் ஓவரில்” ரபாடாவால் வென்ற டெல்லி!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் போட்டியாக அமைந்தது டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல். இந்தப் போட்டியை சூப்பர் ஓவர் வரை சென்று வென்றது டெல்லி அணி.

சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணியின் ரபாடா, டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இவர் என்ன பிராக்டீஸ் பண்றாருன்னு நீங்களே பாருங்க மக்களே! பயிற்சியில் கிறிஸ் கெயில் அட்டகாசம்! இவர் என்ன பிராக்டீஸ் பண்றாருன்னு நீங்களே பாருங்க மக்களே! பயிற்சியில் கிறிஸ் கெயில் அட்டகாசம்!

கொல்கத்தா பேட்டிங் சரிவு

கொல்கத்தா பேட்டிங் சரிவு

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது கொல்கத்தா அணி. துவக்க வீரர்கள் நிகில் நாயக் 7, கிறிஸ் லின் 20 ரங்கள் மட்டுமே அடித்து அணியை கை விட்டனர். அதன் பின் ராபின் உத்தப்பா 11, ராணா 1, ஷுப்மன் கில் 4 என பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் வெளியேறினர்.

மீண்டது கொல்கத்தா

மீண்டது கொல்கத்தா

கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. அப்போது ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 10, பியுஷ் சாவ்லா 12 ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் இழந்து 185 ரன்கள் சேர்த்தது.

டெல்லி பந்துவீச்சு

டெல்லி பந்துவீச்சு

டெல்லி அணியின் பந்துவீச்சு முதலில் சிறப்பாக இருந்தது. சந்தீப் லாமிச்சேன், ஹர்ஷால் பட்டேல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் துவக்கத்தில் குறைவாக ரன்கள் கொடுத்து இருந்தாலும், பின்னர் தினேஷ் கார்த்திக் - ரஸ்ஸல் அதிரடியை தடுக்க முடியாமல் ரன்களை வாரி இறைத்தனர். ஹர்ஷால் பட்டேல் 2, ரபாடா, லாமிச்சேன், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தவான் ஏமாற்றம்

தவான் ஏமாற்றம்

186 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தவான் 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ப்ரித்வி ஷா அபாரமாக ஆடினார். ஸ்ரேயாஸ் ஐயர் 43, ரிஷப் பண்ட் 11 அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

சிக்கல்

சிக்கல்

எனினும், 17.5 ஓவரில் ரிஷப் பண்ட் வெளியேறிய பின் சிக்கல் ஆரம்பம் ஆனது. 18.3 ஓவரில் ப்ரித்வி ஷா 99 ரன்களில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார். மேலும், 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெளியேறியது டெல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெற்றி பெறும்

வெற்றி பெறும்

ப்ரித்வி ஷா விக்கெட் விழுந்த அடுத்த பந்தில், கோலின் இங்கிராம் ஒரு ஃபோர் அடித்தார். டெல்லி அணி வெற்றி பெற்று விடும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. ஹனுமா விஹாரி, கோலின் இங்கிராம் கடைசி ஓவரை சந்தித்தனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய நிலை. குல்தீப் யாதவ் வீசிய அந்த ஓவரில் விஹாரி, இங்கிராம் ஒற்றை ரன்களாக 4 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்தனர். 5வது பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். இதனால், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

டை ஆனதால் சூப்பர் ஓவர்

டை ஆனதால் சூப்பர் ஓவர்

கோலின் இங்கிராம் 1 ரன் மட்டுமே எடுத்து, 2வது ரன் ஓடி வரும் போது ரன் அவுட் ஆனார், இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா பந்து வீசினார்.

டெல்லி 10 ரன்கள்

டெல்லி 10 ரன்கள்

சூப்பர் ஓவரில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தனர். ஒரு ஃபோர் மட்டும் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார். ரிஷப் பண்ட் அதிரடி காட்டாமல், ஒற்றை ரன்களாக ஓட, 10 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி.

11 ரன்கள் எடுத்தால்..

11 ரன்கள் எடுத்தால்..

கொல்கத்தா அணி 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் களமிறங்கினர். டெல்லி அணியில் ரபாடா பந்து வீசினார். முதல் பந்தில் ஃபோர் அடித்த ரஸ்ஸல், 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ரபாடா சூப்பர்

ரபாடா சூப்பர்

அடுத்து ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினர். இவர்கள் ஒற்றை ரன்கள் மட்டுமே எடுக்க, கொல்கத்தா அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. சூப்பர் ஓவரை சிறப்பாக வீசி பாராட்டுக்களைப் பெற்றார் ரபாடா. கொல்கத்தா இந்த ஐபிஎல் தொடரின் முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

Story first published: Sunday, March 31, 2019, 1:09 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
DC vs KKR : Delhi capitals beat Kolkata Knight Riders through super over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X