உலகின் சிறந்த பீல்டர் இவர் தான்.. இந்திய வீரரை கை காட்டிய முன்னாள் ஆஸி. வீரர்!

மும்பை : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர், பயிற்சியாளர் டீன் ஜோன்ஸ் இந்திய வீரர்களை சிறந்த வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளார்.

சிறந்த பீல்டர் என ஜடேஜாவை அடையாளம் காட்டிய அவர், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பல்வேறு சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் அளித்தார்.

அவர் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது இவற்றை தெரிவித்தார்.

சிறந்த பீல்டர் யார்?

சிறந்த பீல்டர் யார்?

தற்போதுள்ள வீரர்களில் சிறந்த பீல்டர் யார் என்ற கேள்விக்கு, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை கை காட்டி இருக்கிறார் டீன் ஜோன்ஸ். பென் ஸ்டோக்ஸ் 2019 உலகக்கோப்பை தொடரிலும், ஜடேஜா, நியூசிலாந்து டெஸ்ட் போட்டியிலும் அந்த ஆண்டின் சிறந்த கேட்ச்சை பிடித்தனர்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா பற்றி கூறுகையில், இந்திய அணியின் அணுகுமுறையை வடிவமைத்தது ரோஹித் சர்மா தான் எனக் கூறினார் டீன் ஜோன்ஸ். ரோஹித் சர்மா சமீபத்தில் உலகக்கோப்பை தொடரில் 5 சதம் அடித்து யாரும் செய்யாத இமாலய சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி பற்றி பேசுகையில், எல்லோரும் வழக்கமாக கூறுவது போல அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் என்றார். அதே போல, ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலி இடையே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பிரபலமான கேள்விக்கும் பதில் அளித்தார்.

ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி

ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி

டீன் ஜோன்ஸ் கூறுகையில், "இருவருமே சிறந்த வீரர்கள் தான். அவர்கள் ஆடும் அணிகள் அவர்களின் திறனை சொல்லும் என்றார். மேலும், அவர்கள் இருவரும் ஐசிசி தொடரில் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தோனி

தோனி

தோனியை தன் சிறந்த ஆறு இந்திய வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளதாக கூறினார் டீன் ஜோன்ஸ். தோனி சிறந்த பினிஷர் என்பதோடு, இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகள் வென்று கொடுத்த ஒரே கேப்டன் ஆவார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Former australian player Dean Jones gave his thoughts about Jadeja, Rohit Sharma and Virat Kohli.
Story first published: Thursday, March 26, 2020, 20:56 [IST]
Other articles published on Mar 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X