For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் தோனி கெத்து தான்.. ஆச்சரியப்பட வைக்கும் சாதனைகள்!

லண்டன் : தோனி தன் 38வது பிறந்த நாளை இன்று (ஜூலை 7) கொண்டாடினார். 38 வயது வரை கிரிக்கெட் விளையாடி வரும் தோனியின் சாதனைகள் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் தோனி சிறப்பாக விளையாடவில்லை, மந்தமாக பேட்டிங் செய்கிறார், விக்கெட் கீப்பிங்கில் கூட சில தவறுகள் செய்தார் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று கூட வதந்திகள் கிளம்பியது. தோனியே மறுக்கும் அளவுக்கு சென்றது அந்த விவகாரம்.

பல சாதனைகள்

பல சாதனைகள்

தோனி கிரிக்கெட்டில் இதுவரை என்ன செய்தார் என்பதை பலரும் மறந்து விட்டனர். பேட்டிங்கில் அவரது சில சாதனைகள் பல ஜாம்பவான் வீரர்களுக்கு இணையானது என்பதை வதந்திகள் பரப்புவோர் நினைத்துப் பார்ப்பதில்லை. தோனியின் சிறந்த ஒருநாள் போட்டி சாதனைகளில் சில இங்கே -

நாட் அவுட்

நாட் அவுட்

தோனிக்கு நாட் அவுட் மன்னன் என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு ஒருநாள் அதிக நாட் அவுட்கள் ஆக இருந்துள்ளார். தோனி பேட்டிங் செய்த 296 இன்னிங்க்ஸ்களில் 84 நாட் அவுட்கள் ஆக இருந்துள்ளார். உலக அளவில் இதுவே அதிகம். அடுத்த இடங்களில் ஷான் பொல்லாக் 72, சமிந்தா வாஸ் 72, மைக்கேல் பெவன் 67 உள்ளனர்.

50+ ஸ்கோர்

50+ ஸ்கோர்

ஒருநாள் போட்டிகளில் அதிகமாக 50 ரன்களுக்கும் மேல் குவித்தவர்கள் பட்டியலில் தோனி 82 50+ ரன்களுடன் பதினோராம் இடத்தில் இருக்கிறார். தோனிக்கு முன்பு இருக்கும் பத்து வீரர்களில் விராட் கோலி தவிர்த்து அனைவரும் தோனியை விட அதிக இன்னிங்க்ஸ் விளையாடியவர்கள்.

ஒருநாள் போட்டி ரன்கள்

ஒருநாள் போட்டி ரன்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி பதினோராம் இடத்தில் இருக்கிறார். 296 இன்னிங்க்ஸ்களில் 10,723 ரன்கள் குவித்துள்ளார். தோனி தான் ஆடியதில் பெரும்பாலான போட்டிகளில் ஐந்தாம் அல்லது ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி இத்தனை ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சராசரி

அதிக சராசரி

பத்தாயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த வீரர்கள் பட்டியலில், கோலி அதிக சராசரி (59) வைத்துள்ளார். அவருக்கு அடுத்து தோனி 50 ரன்கள் சராசரியுடன் இருக்கிறார். தோனி பத்து சதங்கள் மட்டுமே அடித்திருந்தாலும், நாட் அவுட்கள் மூலம் அதிக சராசரி வைத்துள்ளார்.

Story first published: Sunday, July 7, 2019, 17:50 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
Dhoni statistics shows he is one of the greatest cricketer of all time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X