For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் அப்படி பண்ணது தான் எனக்கு பிரச்சனை.. இன்னும் கோபம் தீராத இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்!!

லண்டன் : ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோஸ் பட்லரை, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஸ்வின். அது பெரிய சர்ச்சையானது.

இந்த சம்பவம் குறித்து இந்தியர்கள் கூட மறந்துவிடுவார்கள் போல, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதை மறப்பதாக இல்லை.

வேடிக்கை வீடியோ

வேடிக்கை வீடியோ

கேரளா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் ரன் அவுட் ஆகாமல், நின்ற இடத்தில் இருந்தே ரன் எடுப்பது எப்படி என வேடிக்கையாக ஒரு வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் சார்ந்த பிராண்டான கிரே நிக்கோல்ஸ் அந்த கிரிக்கெட் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

தென்னை மட்டை

அந்த வீடியோவில் நீளமான தென்னை மட்டை ஒன்றை வைத்துக் கொண்டு ஒருவர் நடுவில் நின்று கொண்டு இருக்கிறார். ரன் ஓட வேண்டிய கட்டத்தில் விக்கெட்டின் இரு புறமும் நீளமான தென்னை மட்டை மூலம் கிரீஸை தொட்டு ரன் எடுக்கிறார்.

விளம்பரம்

விளம்பரம்

இதை அந்த நிறுவனம் "நீளமான பேட்" என்பது 2020இல் கிரிக்கெட்டின் புதிய வரவாக இருக்கும். எங்களின் அறிமுகமாகக் கூட இருக்கலாம் என்று கூறி தங்கள் பிராண்டிற்கு விளம்பரம் தேடி உள்ளது.

அஸ்வின் மன்கட் செய்வார்

இதை பார்த்த இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், அஸ்வின் இந்த பேட் வைத்திருந்தாலும் மன்கட் ரன் அவுட் செய்வார் எனக் கூறி தங்கள் வெறுப்பை கக்கி உள்ளார்கள்.

இங்கிலாந்து ரசிகர் கடுப்பு

இந்தியர்கள் சிலர் அஸ்வின் விதிப்படி தான் ரன் அவுட் செய்தார் எனக் குறிப்பிட்டு உள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள இங்கிலாந்து ரசிகர், "அஸ்வின் விதிப்படி செய்வதில் தவறில்லை. ஆனால், அவர் மாதக்கணக்கில் நின்று, அதன் பின்னர் பெயில்ஸ்-ஐ தட்டினார். அது தான் எனக்கு பிரச்சனை. தகுதியில்லாத அம்பயர் ஒருவர் அதற்கு அவுட் கொடுத்ததும் எனக்கு பிரச்சனை" என்றார்.

Story first published: Monday, April 8, 2019, 22:31 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
England fans are still unhapppy with Ahswin’s Mankad run out
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X