For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எழுதி வச்சுக்கோங்க" இந்திய அணியின் ஆக்ரோஷத்தை களத்தில் பார்ப்பீர்கள்.. கேப்டன் கேஎல் ராகுல் உறுதி!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முழு ஆக்ரோஷமும் வெளிப்படும் என்று கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ளது.

இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்பட உள்ளனர். அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி விளையாட 6 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலை இருக்கிறது.

வங்கதேச வரலாற்றில் மிகப் பெரிய தோல்வி.. 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி ! வங்கதேச வரலாற்றில் மிகப் பெரிய தோல்வி.. 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி !

கேஎல் ராகுல் பேட்டி

கேஎல் ராகுல் பேட்டி

இந்த நிலையில் கேப்டன் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது எங்களின் கவனம் இருக்கிறது. அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்காக களத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவோம். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி எங்கு இருக்கிறது, இறுதிப் போட்டிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பதும் நன்றாக தெரியும்.

ஆக்ரோஷமான கிரிக்கெட்

ஆக்ரோஷமான கிரிக்கெட்

அதனால் விளையாட உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செஷனிலும் கவனமாக இருப்போம். டெஸ்ட் போட்டி நடக்க உள்ள மைதானத்தின் தன்மையை கவனித்து வருகிறோம். ஐந்து நாட்கள் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன திட்டத்துடன் களமிறங்குவோம். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட்டில் தேவை மாறுபடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். ரசிகர்கள் அனைவரும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை பார்க்க போகிறார்கள் என்று தெரிவித்தார்.

அதிரடி அணுகுமுறை சரியா?

அதிரடி அணுகுமுறை சரியா?

தொடர்ந்து இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, இங்கிலாந்து அணியின் ஆட்டம் பொறுப்பற்றது என்று கூற மாட்டேன். ஏனென்றால் கிரிக்கெட்டை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் மாறி வருகிறது. இதனை இப்படி தான் விளையாட வேண்டும் என்று எந்த இலக்கணமும் இல்லை. இங்கிலாந்து அணியின் அதிரடி அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு அணுகுமுறை உள்ளது. அது சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்று தெரிவித்தார்.

ரோகித் சர்மா எப்போது திரும்புவார்?

ரோகித் சர்மா எப்போது திரும்புவார்?

தொடர்ந்து ரோகித் சர்மா 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, இந்திய அணியின் மிக முக்கிய வீரர் ரோகித் சர்மா. விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்ரு தெரிவித்தார்.

சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு?

சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு?

பின்னர் தொடக்க வீரர் சுப்மன் கில் பற்றி கேள்விக்கு, சுப்மன் கில் மிக திறமையான வீரர். ஒருநாள் போட்டிகளில் அவரின் பேட்டிங் அருமையாக இருந்தது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான திறமை உள்ளது. இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும். ஒரு கேப்டனாக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்குவது கடமை என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 12, 2022, 20:06 [IST]
Other articles published on Dec 12, 2022
English summary
Captain KL Rahul said that India's full aggression will be revealed in the first Test match against Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X