உலக கோப்பையில் இந்தியாவை, பாகிஸ்தான் தோற்கடிக்கும்… முன்னாள் கேப்டன் நீங்க இப்படி சொல்லலாமா

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் உலக கோப்பைக்கு பாகிஸ்தான் களமிறங்குவதால், அங்கு நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தும். அதை விட பல நூறு மடங்கு பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய போட்டி என்றால் அது பரம வைரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நிகழ்ந்துவரும் தாக்குதல்களும் பகைமை உணர்வும் உலகம் அறிந்த ஒன்று. அந்த உணர்வை கிரிக்கெட் ரசிகர்கள் அப்படியே இந்தியா,பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளிலும் வெளிப்படுத்துவர்.

ஐபிஎல் தொடருக்கு பை - பை சொன்ன அந்த அதிரடி வீரர்... கடைசியாக பேசியது இதுதான்

தாக்குதல், நிறுத்தம்

தாக்குதல், நிறுத்தம்

கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நாசர் உசேன் கருத்து

நாசர் உசேன் கருத்து

உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தனது கருத்தினை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

நுழைவது சந்தேகம்

நுழைவது சந்தேகம்

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில், லீக் போட்டிகளில் பாகிஸ்தான் 124 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு நுழைவதே சந்தேகம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவை வீழ்த்தியது

இந்தியாவை வீழ்த்தியது

ஆனால், சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து போட்டியை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இறுதிப் போட்டியிலும் பலம் மிக்க இந்திய அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை நாம் அனைவரும் கண்ட ஒன்றே.

வெற்றியே இல்லை

வெற்றியே இல்லை

பல வருடங்களாக பாகிஸ்தான் அணியை கவனித்து வருகிறேன். தோல்வி அடைந்த பிறகும் சற்றும் மனம் தளராமல் முன்னேறி தொடரை கைப்பற்றும் அளவிற்கு வல்லமை படைத்தது பாகிஸ்தான் அணி. இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியிடம் வெற்றியே பெறவில்லை.

மிகுந்த ஆவல்

மிகுந்த ஆவல்

அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் உலக கோப்பைக்கு களமிறங்குகிறது. எனவே அங்கு நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். உலகில் உள்ள மற்ற ரசிகர்களைப் போலவே அதை பார்க்க நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

பதிலடி தரும் பாக்.

பதிலடி தரும் பாக்.

எனவே,இந்திய அணிக்கு எதிராக உலக கோப்பையில் முதல் வெற்றியை பெற பாகிஸ்தான் துடிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் படுதோல்வியடைந்த பிறகு பதிலடி கொடுக்க துடிக்கும் இந்தியாவும் தயாராக உள்ளது. இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி கிரிக்கெட் உலகிற்கு உச்சத்தை பெற்றுத் தரும் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The fact is that you cannot write off Pakistan for this World Cup says former england captain Nasser hussain.
Story first published: Tuesday, April 30, 2019, 11:42 [IST]
Other articles published on Apr 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X