For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது.. பந்தை காணோமா? மாங்கு மாங்கு என தேடிய வீரர்கள்.. விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்!

Recommended Video

பந்தை காணோமா? மாங்கு மாங்கு என தேடிய வீரர்கள்.. விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்!-வீடியோ

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பந்து காணாமல் போன சம்பவம் நடந்தது.

பந்தை எங்கே சென்றது எனத் தெரியாமல் தென்னாப்பிரிக்கவீரர்கள் மாங்கு மாங்கு என கீழே குனிந்து தேடிக் கொண்டு இருந்தனர்.

பந்து எங்கே இருக்கிறது என்பதை திரையில் கண்ட ரசிகர்கள், தென்னாப்பிரிக்க வீரர்கள் தேடிக் கொண்டு இருந்த காட்சியை கண்டு நீண்ட நேரம் சிரித்தனர்.

உலகிலேயே யாரும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேஜிக் செய்த இந்திய ஜோடி!உலகிலேயே யாரும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேஜிக் செய்த இந்திய ஜோடி!

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அசத்தினர்.

இந்தியா இமாலய ஸ்கோர்

இந்தியா இமாலய ஸ்கோர்

முதல் நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

ஜடேஜா பேட்டிங்

ஜடேஜா பேட்டிங்

இந்தியாவின் இன்னிங்க்ஸ்-இன் போது ஜடேஜா 500 ரன்களை இந்தியா எட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆடி வந்தார். அப்போது தான் பந்து காணாமல் போன சம்பவம் நடைபெற்றது.

பவுண்டரி சென்ற பந்து

பவுண்டரி சென்ற பந்து

129வது ஓவரின் போது கேஷவ் மகாராஜ் வீசிய ஐந்தாவது பந்து ஜடேஜா பேட் மற்றும் உடலில் படாமல் திசை மாறி பவுண்டரி சென்றது. பீல்டர்கள் யாராலும் பந்தை பிடிக்க முடியவில்லை.

பந்தை தேடிய வீரர்கள்

பந்தை தேடிய வீரர்கள்

பவுண்டரி எல்லையை தொட்ட பந்து காணாமல் போனது. பந்து பவுண்டரி எல்லைக்கு பின்னே மழை வந்தால் மூடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த திரைகளுக்கு பின்னே ஒளிந்து கொண்டு இருக்கலாம் என எண்ணி தேடி வந்தனர்.

கேமராமேன் உதவி

கேமராமேன் உதவி

அப்போது பந்தை கேமரா உதவியுடன் கண்டுபிடித்த கேமராமேன், பந்து இருக்கும் இடத்தை பெரிதாக்கி மைதானத்தில் இருந்த பெரிய திரையில் தெரியுமாறு காட்டினார். அப்போதும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதை கவனிக்காமல் பந்தை தேடி வந்தனர்.

கண்டுபிடித்த மார்கிரம்

பின்னர், தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரம் திரையில் பந்தை பார்த்து விட்டு, ஓடி வந்து பந்தை எடுத்தார். தென்னாப்பிரிக்க வீரர்கள் அசடு வழிய சிரித்துக் கொண்டே போட்டியை தொடர்ந்தனர்.

சிரித்த ரசிகர்கள்

சிரித்த ரசிகர்கள்

இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரித்தனர். வர்ணனை செய்பவர்களும் "ஏன்பா.. பந்து இங்கே இருக்குப்பா!" என திரையை பார்த்து விட்டு, கிண்டல் அடித்து சிரித்தனர்.

Story first published: Friday, October 4, 2019, 11:33 [IST]
Other articles published on Oct 4, 2019
English summary
IND vs SA : SA fielders lost the ball in plain sight and fans make fun of them. This incident happened at 129th over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X