For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்ப அதுக்குத்தான் இவரை டீம்ல வைச்சுருக்கீங்களா? கோலியின் துருப்புச் சீட்டு வீரர்.. வெளியான ரகசியம்!

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஷமி ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆச்சரியம் அளித்தார்.

வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஆடுகளத்தில் முகமது ஷமி எப்படி ஐந்து விக்கெட் வீழ்த்தினார்? அது தான் அவரது திறமை என தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஷமியை இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சுக்கு என்றே அணியில் கேப்டன் கோலி ஆட வைக்கிறார் என்ற தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது.

டெஸ்ட் வரலாற்றை புரட்டிப் போட்ட போட்டி.. 2 அணியும் சேர்ந்து செய்த இமாலய சாதனை.. ஹிட்மேனுக்கு நன்றி!டெஸ்ட் வரலாற்றை புரட்டிப் போட்ட போட்டி.. 2 அணியும் சேர்ந்து செய்த இமாலய சாதனை.. ஹிட்மேனுக்கு நன்றி!

போட்டியில் வெற்றி

போட்டியில் வெற்றி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 395 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்க்ஸ் ஷமி ஆட்டம்

முதல் இன்னிங்க்ஸ் ஷமி ஆட்டம்

முதல் இன்னிங்க்ஸில் வேகப் பந்துவீச்சாளர்களில் இஷாந்த் மட்டுமே ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஷமி 18 ஓவர்கள் வீசி இருந்தாலும், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. எனினும், அனைவரையும் விட குறைந்த அளவில் ரன்கள் கொடுத்தார்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் பவுலிங்

இரண்டாம் இன்னிங்க்ஸ் பவுலிங்

அதே சமயம், இரண்டாம் இன்னிங்க்ஸில் 10.5 ஓவர்கள் வீசிய அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை சுருட்டினார். வேகப் பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், அவர் மட்டும் விக்கெட் வேட்டை நடத்தினார்.

நான்கு பவுல்டு அவுட்

நான்கு பவுல்டு அவுட்

அவர் எடுத்த ஐந்து விக்கெட்களில் நான்கு பவுல்டு அவுட் முறையில் கிடைத்தது. அந்த அளவுக்கு துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தார் அவர். மேலும், சரியாக பவுன்ஸ் ஆகாத ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் வீசி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

பும்ரா சாதனை சமன்

பும்ரா சாதனை சமன்

நான்கு பவுல்டு அவுட் செய்த ஷமி, இந்திய அளவில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக பவுல்டு அவுட் செய்த வீரர்கள் வரிசையில் முதலாவதாக பும்ராவுடன் இணைந்தார். பும்ரா கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் அந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய மண்ணில் சாதனை

இந்திய மண்ணில் சாதனை

மேலும், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியின் நான்காம் இன்னிங்க்ஸில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் ஷமி. முன்னதாக கபில் தேவ், கர்ஷன் காவ்ரி, மதன் லால், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் அந்த சாதனையை செய்துள்ளனர்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் செயல்பாடு

இரண்டாம் இன்னிங்க்ஸ் செயல்பாடு

ஷமி முதல் இன்னிங்க்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் சில புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. கடந்த 2018 முதல் இந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில், 15 இன்னிங்க்ஸ் ஆடி அதில் 40 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் ஷமி.

முதல் இன்னிங்க்ஸில் குறைவு

முதல் இன்னிங்க்ஸில் குறைவு

இதே காலகட்டத்தில் முதல் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் 16 இன்னிங்க்ஸ்களில் 23 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார் ஷமி. டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்க்ஸில் தான் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும்.

கோலி திட்டம்

கோலி திட்டம்

ஆனால், ஷமி முக்கியமான இரண்டாம் இன்னிங்க்ஸில் தான் சிறப்பாக செயல்படுகிறார். இதை அறிந்தே தான் கேப்டன் கோலி அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணமும் வருகிறது. போட்டி முடிந்த உடன் இது பற்றி பேசினார் அவர்.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

கோலி கூறுகையில், ஷமி இரண்டாம் இன்னிங்க்ஸின் ஸ்ட்ரைக் பவுலர் என குறிப்பிட்டு பேசினார். அதை வைத்துப் பார்த்தால் கோலி தன் திட்டத்தில் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஷமிக்கு முக்கிய இடம் அளிக்கிறார் என்பது புரிகிறது. கோலியின் இரண்டாம் இன்னிங்க்ஸ் துருப்புச் சீட்டு ஷமி தான்!

Story first published: Sunday, October 6, 2019, 18:23 [IST]
Other articles published on Oct 6, 2019
English summary
IND vs SA : Shami is the trump card of captain Kohli in second innings. Shami’s records in second innings are mindblowing and Kohli said Shami is strike bowler in second innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X