For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தை சுருட்டி தூக்கிப் போட்ட இஷாந்த்.. 194 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியுள்ளது.

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் அசத்தலாக பந்து வீசி இங்கிலாந்தை அதன் 2வது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருட்டினர். இஷாந்த் சர்மா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை அள்ளினார்.

அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது.

ஆயிரமாவது டெஸ்டில் விளையாடும் முதல் அணியான இங்கிலாந்து டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 80, ஜானி பிரிஸ்டோ 70, கீடன் ஜென்னிங்ஸ் 42 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 4, ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் உள்ள 10 வீரர்களும் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி 149 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

திணறும் இங்கிலாந்து

திணறும் இங்கிலாந்து

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி விட்டது. இந்தியாவின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 180 ரன்களுக்கு சுருண்டு போனது.

பரிதாப பேட்டிங்

பரிதாப பேட்டிங்

ஜானி பிரிஸ்டோ 28, டேவிடன் மாலன் 20, கேப்டன் ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்தனர். அலிஸ்டர் குக் 0, கீடன் ஜென்னிங்ஸ் 8, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து சரிந்தது.

அஸ்வின், இஷாந்த் கலக்கல்

அஸ்வின், இஷாந்த் கலக்கல்

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களையும் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் தன் பங்குக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.

வெற்றிக்கு 194

வெற்றிக்கு 194

இதையடுத்து தற்போது இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் முரளி விஜய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா சற்று நிதானமாக , அதேசமயம், புத்திசாலித்தனமாக ஆடினால் வெற்றி பெறலாம்.

Story first published: Friday, August 3, 2018, 21:12 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
After virat kohli now the focus is on the bowlers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X