For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ப முடியலையே.. கோலி - சச்சின் பற்றி திரையில் காட்டப்பட்ட விஷயம்..ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது விராட் கோலி - சச்சின் குறித்து திரையிடப்பட்ட சுவாரஸ்ய விஷயம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்பேர்னில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி சிறப்பான ஸ்கோரை அடித்தது.

விராட் கோலி மீண்டும் புறக்கணிப்பு.. ஐசிசி வீடியோவால் புது சர்ச்சை.. ட்விட்டரில் ரசிகர்கள் போர்க்கொடிவிராட் கோலி மீண்டும் புறக்கணிப்பு.. ஐசிசி வீடியோவால் புது சர்ச்சை.. ட்விட்டரில் ரசிகர்கள் போர்க்கொடி

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

அந்த அணியில் தொடக்க வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே மோசமாக சொதப்ப, 15 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் வந்த ஷான் மசூத் 52 ரன்களும், இஃப்திகார் அஹ்மது 51 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்துள்ளது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்நிலையில் பாகிஸ்தான் இன்னிங்ஸின் போது மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கோலி குறித்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை குறித்து அங்குள்ள திரையில் காட்டப்பட்டது. அதில் அவர்கள் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்களை கடந்ததில் பல ஒற்றுமைகள் உள்ளன என குறிப்பிட்டிருந்தனர்.

டெஸ்ட் மைல்கல்

டெஸ்ட் மைல்கல்

அதாவது விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 டெஸ்ட் ரன்களை ஒரே நாளில் தான் கடந்தனர். அதாவது இருவருமே டிசம்பர் 28ம் தேதியன்று தான் 1000 ஆவது ரன்களை அடித்தனர். அதுவும் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்த மைல்கல்லை எட்டினர்.

வயது & இன்னிங்ஸ்

வயது & இன்னிங்ஸ்

அவர்கள் இருவருமே தங்களது 26வது வயதில் தான் தான் இதனை செய்தனர். இதுமட்டுமல்லாமல் இருவருக்குமே இன்னிங்ஸிலும் ஒற்றுமை உள்ளது. இருவருமே 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11வது இன்னிங்ஸின் போது தான் இதனை செய்தனர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இருவருமே இந்த மைல்கல்லை எட்டும் போது 5 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை அடித்திருந்தனர். சச்சினுக்கும் - விராட் கோலிக்கும் இடையே இப்படி ஒரு ஒற்றுமையா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Story first published: Sunday, October 23, 2022, 17:03 [IST]
Other articles published on Oct 23, 2022
English summary
A mind-blowing stat of Virat & Sachin displayed at MCG during India vs Pakistan of t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X